பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்..!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்

கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சந்தை மிக மோசமாக இருக்கிறது. இறக்கம் என்பது கிட்டதட்ட அனைத்துப் பங்குகளிலும் இருக்கிறது. சிறு முதலீட்டாளரோ, பெரிய முதலீட்டாளரோ பெரும்பாலும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சந்தையின் சென்டிமென்ட் மோசமாக இருக்கிறது. இது வரும் வாரங்களில் சந்தை ஏறுவதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். சந்தையின் இறக்கம் என்பது எந்தப் பிரிவையும் விட்டு வைக்கவில்லை.

மதிப்பு வீழ்ச்சி என்பது ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் அதிகமாக இருக்கிறது. கடந்த மாதம் அல்லது கடந்த இரு மாதங்களில் முதலீட்டு மதிப்பு குறைந்துள்ளதால், பெரும்பாலான முதலீட்டாளர்களை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. வெள்ளிக்கிழமை புதிய ஸ்விங் லோவாக 6875-க்கு நிஃப்டி இறங்கி, 6981-ல் நிறைவு பெற்றிருக்கிறது.

சந்தையின் இறக்கம் நிஃப்டி புள்ளிகளை அதன் நீண்ட கால 50 சதவிகித ரீடிரேஸ்மென்ட் ஜோன்-ல் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது. நிஃப்டி புள்ளிகள் சுமார் 7295-க்கு ஏற்றம் கண்டால்தான் சந்தை தொடர்ந்து மேலே ஏறக்கூடும். இந்த நிலையில், 65 லெவல்களில் 7100 லாங் கால் போவது நல்லதாக இருக்கும். இதேபோல், பேங்க் நிஃப்டியில் சுமார் 120 லெவல்களில் 14500 கால் வாங்கி வைப்பது நல்லது. எதிர்பார்க்கப்பட்டது போல் சந்தை ஏறினால்தான் இந்த இரு கால் ஆப்ஷன்களும் சரியாக இருக்கும்.

சன் பார்மா (SUN PHARMA): வாங்கவும்.

தற்போதைய விலை: ரூ.847.35

ரான்பாக்ஸி மற்றும் மற்ற விஷயங்களால் இந்தப் பங்கின் போக்கு சற்று சந்தேகமாக இருந்தது. ஆனால், சமீப காலங்களில் இந்தப் பங்கின் விலை மீண்டும் உயர்ந்து வருவது நன்றாகவே தெரிகிறது. இந்தப் பங்கின் பேட்டர்ன்களில் படிப்படியாக அதிக டாப் மற்றும் அதிக பாட்டம் உருவாவது தெரிகிறது. இது இந்தப் பங்கின் விலை உயர்வை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

கடந்த வாரம் சந்தை பலவீனமான நிலையில் இருந்தபோதிலும், இந்தப் பங்கின் போக்கு ஏற்றத்தில் இருந்தது. இப்போது இந்தப் பங்கின் விலை கூடுதலாக உயர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இந்தப் பங்கை ரூ.845-க்கு மேலே வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.825 வைத்துக்கொள்ளவும். இந்த வாரம் விலை ரூ.900 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்