வரிச் சலுகை: பெஸ்ட் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்!

வித்யா பாலா, சீனியர் ரிசர்ச் அனலிஸ்ட், Fundsindia.com

து வருமான வரிச் சலுகைக்கான முதலீடுகளைத் தேடும் காலம். வருமான வரிச் சலுகை பெற பெஸ்ட்-ஆன முதலீடுகளாக இருப்பவை இ.எல்.எஸ்.எஸ் என்ற ஈக்விட்டி லிங்க்ட் சேவிங் ஸ்கீம். நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை தரும் வல்லமை கொண்டவை இந்த வகை  ஃபண்டுகள். வருமான வரிச் சலுகை பெற எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்று தேடுபவர்கள், இங்கே பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஃபண்டுகளை பரிசீலிக்கலாம். இதில் முதலீடு செய்யும்முன், எந்த நோக்கத்துக்காக இதில் முதலீடு செய்கிறீர்கள், எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும், இந்த ஃபண்டுகளில் உள்ள ரிஸ்க் என்ன என்பதை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது.

ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ் ஷீல்டு!

ஈக்விட்டி திட்டங்களில் புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு இந்த ஃபண்ட் சிறந்தது. இது லார்ஜ் கேப் வகை டாக்ஸ் சேவிங் ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்ட் ரிஸ்க் குறைவான தரமான மிட்கேப் வகை பங்குகளை தனது போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்கிறது. தன்னுடைய போர்ட்ஃபோலியோவை அடிக்கடி மாற்றி அமைக்காதது இந்த ஃபண்டின் இன்னொரு சிறப்பு.

இதன் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் சிஎன்எக்ஸ் 500 ஆகும். கடந்த மூன்றாண்டு கால வருமானத்தை ஒப்பிடுகையில், பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக வருமானம் கொடுத்துள்ளது. இருந்தபோதிலும் சந்தை உயரும்போது இந்த ஃபண்ட் தனது மிட்கேப் பங்குகளின் முதலீட்டை அதிகரிக்கவில்லை.

இந்த நிலையில், ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கான வருமானமானது மற்ற ஃபண்டுகளைவிட மிகவும் நல்ல நிலையிலே இருக்கிறது. இந்த ஃபண்ட் மிதமான ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்றது.

பிஎன்பி பரிபாஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட்!

இந்த ஃபண்ட் ஏற்ற இறக்க சந்தையிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஃபண்டாகும். இந்த ஃபண்ட் கடந்த 2010-க்கு பிறகு தனது செயல்பாட்டை அதிகரித்து, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதன் கேட்டகிரி ஃபண்டைவிட அதிக வருமானம் தந்து வருகிறது. இதன் ஃபண்டில் இடம்பெற்றிருக்கும் 70 - 75 சதவிகித பங்குகள் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸான சிஎன்எக்ஸ்    200-ல் இடம்பெற்றவை.

பிஎன்பி பரிபாஸ் ஃபண்ட் நிறுவனத்தின் பெரும்பாலான ஃபண்டுகள் நிலையானதாக இருக்கும். இந்த ஃபண்ட் டெலிகாம் துறை வேகமெடுக்கும் என எதிர்பார்க்கிறது. இந்த ஃபண்ட் மிதமான ரிஸ்க் எடுப்பவர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட்!

இந்த ஃபண்டின் வருமானம் நினைத்து பார்க்க முடியாத நிலையில் உள்ளது. அதாவது, கடந்த 3, 5 வருடத்தின் வருமானம் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸான பிஎஸ்இ 200 விட அதிகமாக உள்ளது. இந்த வருமானம் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸை விட 10 சதவிகிதத்துக்கும் அதிகம். இதில் முதலீட்டாளர்கள் எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்ப கிடைக்கும் வருமானம் கேட்டரிகிரியைவிட சிறப்பாக உள்ளது. இந்த ஃபண்ட் சந்தையின் ஏற்ற இறக்க சமயங்களிலும் நன்றாகச் செயல்பட்டுள்ளது. இந்த ஃபண்ட் குறைவான ரொக்கத்தை கையில் வைத்திருப்பதும், மிட்கேப் பங்குகளில் அதிக முதலீடு செய்துள்ளதும் அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு பொருந்தும்.  இந்த ஃபண்ட் முதலீடு செய்திருக்கும் டாப் 5 பங்குகள் மொத்த போர்ட்ஃபோலியோவில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது.

ஐடிஎஃப்சி டாக்ஸ் அட்வான்டேஜ் இஎல்எஸ்எஸ் ஃபண்ட்!

இந்த ஃபண்ட் கடந்த ஐந்து வருடங்களாக பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக வருமானம் தந்து வருகிறது. இதன் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் பிஎஸ்இ 200 ஆகும். இந்த ஃபண்டின் பெரும்பான்மையான முதலீடு லார்ஜ் கேப் பங்குகளில் உள்ளது. குறைந்த அளவில்தான் மிட் கேப் பங்குகளில் உள்ளது.

மேலும், சந்தை இறங்கும் சமயங்களில் இந்த ஃபண்டின் கேஷ்கால் அதிகமாக இருக்கும். அதன் அளவு 10% வரை கூட இருக்கும். இதன் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் 35 பங்குகள் உள்ளன. இந்த வகை ஃபண்ட் மிதமான ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்றது.

ஐசிஐசிஐ புரூ. டேர்ம் ஈக்விட்டி (டாக்ஸ் சேவிங்)

இந்த ஃபண்ட் 1999 வருடம் துவங்கப்பட்டது. பல்வேறு வகையான சந்தை சூழ்நிலைகளிலும், மியூச்சுவல் ஃபண்ட் எப்படி சிறப்பாக செயல்படும் என்பதற்கு இந்த ஃபண்ட் சிறந்த உதாரணம். இப்போது கரடி சந்தை நீடிப்பதால், குறுகிய கால மற்றும் நடுத்தர காலத்தில் ஏற்ற இறக்கத்தில்தான் இருக்கும். அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு இந்த ஃபண்ட் ஏற்றது. இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ வில் 25 - 35% மிட் கேப் பங்குகள் உள்ளன. கரடி சந்தையின் போது அதிக இழப்பு இருக்கும். எனினும், நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடியது. இதன் போர்ட் ஃபோலியோவில் இருக்கும் சில பங்குகள்  குறுகிய காலத்தில் இறக்கம் அடைய செய்யும்.

தொகுப்பு: இரா.ரூபாவதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick