இறக்கத்தில் சந்தை: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்தால் லாபம்?

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் பா.ஜ.க அரசாங்கம் பதவி ஏற்றதிலிருந்து பங்குச் சந்தை வெகு வேகமாக உச்சத்துக்குச் சென்றது. இன்று, உச்சத்திலிருந்து 20 சதவிகிதத்துக்கும்  மேலாக விழுந்துவிட்டது. இன்னும் விழுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

சந்தை ஏறும்போதும் சரி, அதேபோல் இறங்கும்போதும் சரி, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், சந்தையை ஒட்டி ஏற்ற இறக்கத்தைக் காணும். இந்த ஏற்ற இறக்கத்தின் காரணமாக, முதன்முறையாக சந்தையில் நுழைந்துள்ள சிலர், தாங்கள் செய்துவரும் எஸ்.ஐ.பி முதலீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிடலாமா என்று நினைக்கிறார்கள்.  இன்னும் சிலர், சந்தை இறங்கிக் கொண்டே இருக்கிறது. எனவே, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அனைத்தையும் விற்றுவிட்டு, லிக்விட் ஃபண்டுகளில் போட்டுக் கொள்ள நினைக்கிறார்கள். 

வெங்காயத்தின் விலை குறைந்தால், அதனை அறுவடை செய்யும் நாக்பூர் விவசாயிதான் கவலைப்பட வேண்டும். நுகர்வோராகிய நாம் மகிழ்ச்சி அடையத்தானே வேண்டும்! வெங்காயம் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்றபோது நாம் ஒரு கிலோதான் வாங்கினோம். ஆனால், இன்று அதே 80 ரூபாய்க்கு, 4 கிலோ வாங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சமயத்தில் கூடுதலாக இன்னொரு 80 ரூபாயை செலவழித்து, நான்கு கிலோ வெங்காயத்தை வாங்கி வைத்துக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்