வரி இல்லாத பாண்டுகள் சிறு முதலீட்டாளர்களுக்கு லாபம் தருமா?

கேள்வி - பதில்

?வரி இல்லாத பாண்டுகள் (tax free bonds) அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இது சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதா?

முத்துகுமரன், சேலம்,

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர், வைஸ் வெல்த் அட்வைசர்ஸ்.

“வரி இல்லாத பாண்டுகளில் முதலீடு செய்தால் நீண்ட காலத்துக்கு சிறு முதலீட்டாளர்களின் பணம் அங்கேயே முடங்கிப் போக வாய்ப்பிருக்கிறது. சில பாண்டுகளுக்கு குறைந்தபட்ச  முதலீட்டு வைத்திருப்புக் காலமே பத்து ஆண்டுகள். வரி இல்லாத பாண்டுகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும், பத்து வருடங்களுக்கு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அதிக வருமானமும், மூலதன ஆதாய வரிக்கு வரிச் சலுகையும் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ரிஸ்க் அதிகம் எடுக்க விரும்பாத முதலீட்டாளராக (conservative investor) இருந்தால், பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். வரி இல்லாத பாண்டுகளைக் காட்டிலும் அதிக வருமானத்தையும் வரிச் சலுகையையும் பேலன்ஸ்டு ஃபண்டுகள் கொடுக்கக் கூடியவை. வரி இல்லாத பாண்டுகள் சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இல்லை.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்