ரயில்வே பட்ஜெட்... தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?

சோ.கார்த்திகேயன்

த்திய ரயில்வே பட்ஜெட்டை வரும் 25-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு. ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அண்மையில் அவர் தெரிவித்தார்.

எனினும், கடந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு புதிய ரயில்கூட அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே நிலுவையில் உள்ள தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இந்த முறையாவது தமிழகத்தில் ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்ற கேள்வியுடன் தமிழக பயணிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ரயில்வே பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுவுடன் பேசினோம். அவர் “ரயில்வே திட்டங்களைப் பொறுத்த வரை தமிழகத்தில் நிலுவையில் நிறைய திட்டங்கள் உள்ளன. ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு முன்னரே நாங்கள் அறிவித்த திட்டங்களுக்கு இன்னும்கூட நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்