நிதி அமைச்சர் அருண் ஜேட்லி... சொன்னது என்ன? செய்தது என்ன?

சோ.கார்த்திகேயன்

வ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பல திட்டங்களை அறிவித்து, அதற்காக நிதியையும் ஒதுக்கீடு செய்வார் மத்திய நிதி அமைச்சர். அப்படி அறிவிக்கும் திட்டங்கள் அடுத்த பட்ஜெட்டுக்குள்ளாவது  நிறைவேறத் தொடங்கி இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அறிவித்த திட்டங்கள் என்ன, அந்தத் திட்டங்களின் இன்றைய நிலை என்ன என்பதை பார்க்கலாமா?

எய்ம்ஸ் மருத்துவமனை!

என்ன சொன்னார்?

கடந்த 2015-16-ம் நிதி ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, பஞ்சாப், அஸ்ஸாம், காஷ்மீர், இமாசலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர்.

செய்தாரா?


தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), பெருந்துறை ஆகிய ஐந்து இடங்களில் ஏதேனும் ஒன்றில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அந்த இடங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். பத்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை. சில மாநிலங்களில் எய்ம்ஸ் அமைக்க  இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல்லும்  நாட்டப்பட்டு  விட்டது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்துதர வேண்டியது மாநில அரசின் வேலை. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நமது மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்