போர்ட்ஃபோலியோ சேவை: நில்... கவனி... தேர்வு செய்!

ப்ரிஜேஷ் வேத், மூத்த போர்ட்ஃபோலியோ மேனேஜர், பிஎன்பி பரிபாஸ் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி.

ன்றைய தேதிக்கு ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்து இணையத்தில் போய் பார்த்தால் பல வகைகளில், பல விலைகளில், பல தரங்களில் பொருட்களை விற்க பலரும் தயாராக இருக்கிறார்கள். இப்படி பலரும் விற்கத் தயாராக இருக்கும்போது ஏதோ ஒருவரிடம் நாம் பொருட்களை வாங்கிவிடுவதில்லை. எந்தக் கடைக்காரர் நமக்கு (கஸ்டமருக்கு) தேவையான விஷயங்களை எல்லாம் தரத் தயாராக இருக்கிறாரோ, அவரிடத்தில்தான் வாங்குவோம்.

நிதித் துறையும் அப்படித்தான். நிதி சேவைகள் குறித்து விழிப்பு உணர்வு உள்ள வாடிக்கையா ளர்களுக்கு, தாங்கள் எடுக்கும் ரிஸ்குக்கு செய்யும் முதலீடுகள் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற விவரங்களோடு, நல்ல தரமான ஆலோசனைகளும் தேவைப்படு கிறது. இன்று சந்தையில் நிதி சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தாற் போல பல முதலீடுகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட முதலீடு அல்லது முதலீட்டு முறைகளில் ஒன்றுதான் பிஎம்எஸ். அது என்ன பிஎம்எஸ்?

 போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ்!


போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்பதன் சுருக்கம்தான் பிஎம்எஸ் சேவை. ஒரு குறிப்பிட்ட நிதி இலக்கை அடைய வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை ஒரு நிபுணர் மூலமாகவோ அல்லது நிபுணர் குழு மூலமாகவோ நிர்வகிப்பார்கள்.

இந்தச் சேவையின் சிறப்பு, வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து, முதலீடுகளை வாடிக்கையா ளர்களே முடிவு செய்யலாம்.

பொதுவாக, இது போன்ற பிஎம்எஸ் சேவைகள் ஒரு நிறுவனத்துக்கோ, அதிக பணமுள்ள, வசதியான நபர்களுக்கோ (High Net worth Individuals) வழங்கப்படுகின்றன. ஒருவர் பிஎம்எஸ் சேவைக் கணக்கை தொடங்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச முதலீட்டு தொகையாக ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும்.

செபி அமைப்பிடம் பதிவு செய்து கொண்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த பிஎம்எஸ் சேவையை வழங்க முடியும். வங்கிகள், தரகு நிறுவனங்கள், அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் (மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்) மற்றும் தனிநபர் முதலீட்டு மேலாளர்கள் இந்த பிஎம்எஸ் சேவைகளை வழங்குகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்