சிறுசேமிப்பில் குளறுபடி... முதலீட்டாளர்களுக்கு நெருக்கடி!

சோ.கார்த்திகேயன்

த்திய அரசின் இந்த நடவடிக்கையால் அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு குறையும். சிறுசேமிப்பை நம்பியுள்ள சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.

அரசு அஞ்சல் அலுவலகங்களில் சேமிக்கப்படும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்று இருந்த நடைமுறையை, இனி காலாண்டுக்கு ஒருமுறை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் சிறு சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தையும் அதிரடியாக குறைத்துள்ளது. இதன்படி, சிறு சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம், 1, 2 மற்றும் 3 ஆண்டுகளுக்கான அஞ்சலக டெபாசிட், கிசான் விகாஸ் பத்திரம், 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட் வட்டி விகிதத்தில் 0.25%  குறைக்கப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்பிறகு ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் அரசு பத்திர சந்தை விலைக்கேற்ப மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருவாய் சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம், பிபிஎஃப் ஆகியவற்றில் மாற்றம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால், சிறு சேமிப்பாளர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். காரணம், கிராமங்களில் இருக்கும் அடித்தட்டு மக்கள் தங்கள் பணத்தை சேமிக்க முதலில் நாடுவது அரசு அஞ்சலகங்களைத்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்