ஷேர்லக்!: எட்டு வருட சுழற்சியில் பங்குச் சந்தை!

டப்பு 2016-ம் ஆண்டில் இதுவரைக்கும் இந்தியப் பங்குச் சந்தை சுமார் 15% வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

‘‘முக்கிய அலுவல் காரணமாக இந்த வாரம் வியாழக்கிழமை அன்றே நாணயம் விகடன் இதழை முடிக்கிறோம். எனவே, வியாழன் மாலை நம் அலுவலகத்துக்கு வந்துவிட முடியுமா?’’ என்று புதன்கிழமை காலை ஷேர்லக்குக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினோம். ‘‘நீர் அழைத்தால் வந்துவிட வேண்டியதுதானே!’’ என்று பதில் அனுப்பி இருந்தவர், மாலை ஆறு மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்தார்.

‘‘போகிற போக்கைப் பார்த்தால், சந்தை மறுபடியும் எட்டு வருட சுழற்சிப் பிடிக்குள் சிக்கிக்கொள்ளும் போலிருக்கிறதே?’’ என்றோம் கொஞ்சம் வருத்தத்துடன்.

‘‘கடந்த வாரம் சென்செக்ஸ் 800 புள்ளிகள் இறங்கியது. இந்த நிலையில் உலகச் சந்தைகளின் நிலவரமும், உலகப் பொருளாதாரமும் மந்தநிலையில் இருப்பதால், எட்டு வருட சுழற்சிப் பிடியில் இந்தியப் பங்குச் சந்தையும் சிக்கிக்கொள்ளும் நிலை வருவதற்கு வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில் இந்தியச் சந்தைகள் தொடர்ந்து கரடியின் பிடியில் இருந்து வருகிறது. வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரித்து, அதன் பங்குகள் அனைத்தும் சரிவில் உள்ளன. முக்கிய இண்டெக்ஸ்கள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாகவே 20% வரை வீழ்ச்சியில் தொடர்கின்றன.

2000-ல் இந்தியச் சந்தை 58% வீழ்ந்தது; 2008-ல் 62% சரிவடைந்தது. அதனைத் தொடர்ந்து 2016-ல் அப்படி ஒரு வீழ்ச்சி ஏற்படுமா என்கிற கேள்விக்கு உறுதியான பதிலை சொல்ல யாருமில்லை. உள்நாட்டு மற்றும் சர்வதேச சிக்கல் காரணமாக, சந்தை வீழ்ச்சி அடைந்தாலும் முதலீட்டாளர்கள் பதற்றப்பட வேண்டியதில்லை. 2000, 2008-களில் சந்தை சரியும்போது முதலீடு செய்தவர்கள் பெருத்த லாபம் அடைந்துள்ளனர் என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் சந்தை வீழ்ந்தால், அது முதலீட்டுக்கான நேரம் என்று அனைவரும் தயாராக வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்