பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்..!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

த்திய பட்ஜெட் நெருங்கிக் கொண்டிருப்பது, அடுத்த வார எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி போன்றவற்றால் சந்தை தற்போது ஓவர்சோல்டு நிலையில் இருக்கிறது.

நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்

முந்தைய வாரத்தில் சந்தை குறிப்பிட்ட அளவில்  இறங்கிய நிலையில், கடந்த வாரம் சந்தையில் சற்று ஏற்றத்தை காண முடிந்தது. கரடிகள்  பிடியிலிருந்து சந்தை மீளாத வரை அதிக ஏற்ற இறக்கம் இருக்கவே செய்யும். கடந்த வாரத்தில் புதிய ஸ்விங் லோவாக நிஃப்டி 6875 புள்ளிகள், பேங்க் நிஃப்டி 13812 புள்ளிகள் உருவாகி            இருந்ததை  குறிப்பிட்டிருந்தோம். நிஃப்டியில் ஹாமர்  பேட்டர்ன் உருவாகி, மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சந்தையில் சிறிய ஏற்றம் வரலாம் என்கிற  நிலை தோன்றியது. மோசமான மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவுகளால், மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் விலை அதிக வீழ்ச்சியைக் கண்டது. இது சந்தையிலும்  எதிரொலித்தது. 

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள்  வீழ்ச்சியிலிருந்து மீண்டு வரவில்லை. மத்திய பட்ஜெட் நெருங்கிக் கொண்டிருப்பது, அடுத்த வார எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி போன்றவற்றால் சந்தை தற்போது ஓவர்சோல்டு நிலையில் இருக்கிறது. இதனால், சந்தை ஏற்றத்தில் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்