தொழில் துறை வளர நடவடிக்கை எடுங்கள்!

ஹலோ வாசகர்களே..!

2015-ம் ஆண்டு முடியும் இந்தத் தருணத்தில், நம் வங்கிகளும் தொழில் நிறுவனங்களும் மிக மோசமான நிதி நிலையில் இருப்பதை எச்சரித்திருக்கிறார் மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன். கடந்த மார்ச்சில் 4.6 சதவிகிதமாக இருந்த நம் வங்கிகளின் வாராக் கடன், கடந்த செப்டம்பர் முடிவில் 5.1 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதில், தனியார் வங்கிகளின் வாராக் கடன் வெறும் 4.6 சதவிகிதமாக இருக்க, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் 14.1 சதவிகிதமாக உயர்ந்து, எல்லோரையும் கதிகலங்க வைத்திருக்கிறது.

வங்கிகளின் வாராக் கடன் உயர முக்கிய காரணம், தொழில் நிறுவனங்கள் வாங்கிய கடன், வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதுதான். தொழில் நிறுவனங்கள் வாங்கிய கடனில் ஐந்தில் ஒரு பங்கு திரும்பி வருமா என்கிற சந்தேகத்தை எழுப்புவதாக இருக்கிறது. 2014-15-ம் ஆண்டு பேலன்ஸ்ஷீட்படி, கடன் வாங்கிய மொத்த 441 நிறுவனங்களில் 67 நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகை மட்டுமே ரூ.5.65 லட்சம் கோடியாக இருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு வெறும் 47 நிறுவனங்களே இந்த நிலையில் இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்