கைகூடுமா சொந்த வீடு?

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்து சூரியா

‘‘நான் பிரேம் நிவாஸ். மெடிக்கல் ரெப்பாக வேலை பார்க்கிறேன். என் மனைவி சூர்யபிரியா; வயது 24. பிளஸ் டூ வரை படித்திருக்கிறார். வீட்டுப் பொறுப்பை கவனித்து வருகிறார். குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக கவனித்தாலே போதும் என்பதால் வேலைக்கு போகும் எண்ணம் எதுவும் இல்லை. எங்கள் குழந்தையின் பெயர் தென்றல். அடுத்த இரண்டு மாதத்தில் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடப் போகிறோம். எங்கள் செல்ல மகளுக்கு செல்வமகள் திட்டம் மூலம் கடந்த ஏப்ரல் முதலே மாதம் ரூ.2,500 செலுத்தி வருகிறேன்.  என் அப்பா கண்ணனுக்கு வயது 61. அளவில் சிறிய அம்மி, உரல் போன்ற பொருட்களை வாங்கி விற்கும் பிசினஸ் செய்து வருகிறார்” என தனது குடும்பத்தின் பயோடேட்டாவை சொல்லும் கோவை, தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த பிரேமுக்கு வயது 30.

“மிகப் பிரமாண்டமான இலக்குகள் எதையும் நான் வைத்துக்கொள்ளவில்லை. சராசரித் தேவைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் எனக்கு திட்டங்கள் இருந்தால் போதும் என நினைக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு குழந்தை என திட்டம் வைத்திருப்பதால், அந்தக் குழந்தைக்கான தேவைகளுக்கும் சேர்த்து முதலீட்டுத் திட்டங்களை செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்