2015 தங்கம், வெள்ளி... லாபத்தை அள்ளித் தந்ததா?

ஞானசேகர் தியாகராஜன், இயக்குநர், காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனம்.

2015-ல் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிந்துகொண்டே வந்தது. 2015 ஜனவரி 1-ம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,183 டாலராக இருந்தது. ஆனால், 2015 டிசம்பர் 24-ம் தேதி 1,073 டாலராக விலை குறைந்துள்ளது. சுமார் 100 டாலருக்கு மேல் விலை சரிந்துள்ளது. இது 9.30 சதவிகித சரிவாகும். பல்வேறு சர்வதேச பொருளாதார சிக்கல்கள், அமெரிக்காவின் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பை வெகுநாட்களாக உருவாக்கி வைத்திருந்தது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்துகொண்டே வந்தது.

தங்கத்தை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முன்னணியில் இருக்கின்றன. சீனாவில் பொருளாதார சிக்கல்கள் தொடர்ந்து இருந்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக சீனா தனது நாட்டின் ரூபாயான யுவானின் மதிப்பை குறைத்துக் கொண்டது. மேலும் தங்கம் வாங்குவதும் வெகுவாக குறைந்தது. தங்கம் விலை குறைந்ததற்கு இது முக்கிய காரணம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்