புதிய ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்!

ஹலோ வாசகர்களே..!

மிகுந்த எதிர்பார்ப்புடன் 2016-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம் நாம். பொருளாதார ரீதியில் இந்த ஆண்டாவது நமக்கு நல்ல படியாக அமையுமா என்கிற கேள்வி நம் ஒவ்வொருவரின் மனதில் எழுந்திருப்பது இயற்கையே. காரணம், 2015-ல் சொல்லிக் கொள்ளும்படியான பொருளாதார வளர்ச்சியை நாம் காணவில்லை. பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான நிஃப்டியின் வருமானம் 2015-ல் -4.10 சதவிகிதமாக இருந்தது. ஆனால், 2014-ல் 31.4% லாபம் தந்தது. இவ்வளவு பெரிய லாபத்தை ருசித்துவிட்டு, 2015-ல் நஷ்டம் என்றால் யார்தான் கவலைப்படாமல் இருக்க முடியும்?

ஆனால், பங்குச் சந்தை என்பது ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் ஒரு வெளிப்பாடுதான். பங்குச் சந்தையானது கடந்த ஆண்டில் லாபம் தரமுடியாமல் போகக் காரணம், பொருளாதார வளர்ச்சி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பதினால்தான். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டாலும், இன்னும் அதன் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டுவிடவில்லை. ஐரோப்பாவும் வளர்ச்சி என்பதற்கு தளர்ச்சி என்கிற நிலையில் இருக்கிறது. இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி கண்ட சீனா,  இப்போது சரிவின் பாதையில் இருப்பது எல்லா நாடுகளுக்கும் கெட்ட செய்தியே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்