2016 எதிர்பார்ப்புகள்... எப்படி இருக்க வேண்டும் உங்கள் முதலீடு?

அஸெட் அலோகேஷன் வழிகாட்டல்...ஜி.மாறன், செயல் இயக்குநர், யுனிஃபை கேப்பிட்டல் (Unifi Capital).

2016-ம் ஆண்டில் நம் அஸெட் அலோகேஷன் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆண்டின் தொடக்கத்திலேயே தெரிந்துகொண்டு, அதற்காக  திட்டமிடுவது புத்திசாலித்தனமான ஆரம்பமாக இருக்கும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, நமது அஸெட் அலோகேஷன் எப்படி இருக்கவேண்டும் என்பதை நாணயம் வாசகர்களுக்காக சொல்லி வருவதில் மகிழ்ச்சி. 

இந்த ஆண்டில் எந்த சொத்துப் பிரிவில் முதலீடு செய்வது என தீர்மானிப்பது இன்றைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. இதற்குமுன் ஒரு முதலீட்டின் போக்கு  நீண்ட காலத்துக்கு நீடிக்கும். அப்போது நன்றாக செயல்படும் முதலீட்டை தேர்வு செய்வது எளிதாக இருந்தது.

இப்போது முதலீட்டுச் சுழற்சிகள் என்பது குறுகிய காலம் கொண்டவையாக மாறி வருகின்றன. ஒரு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட முதலீடு, அடுத்த ஆண்டிலும் அதுபோல செயல்பட மறுக்கிறது. எனவே, இந்தச் சுழற்சிக்கேற்ப அஸெட் அலோகேஷனை மாற்றி அமைப்பது ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறது. 

இன்றைய முதலீட் டாளர்களின் பொது வான எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது?

* தங்கம் விலை குறைவது நின்று, 2016-ம் ஆண்டிலாவது அதன் விலை உயருமா? 

* ரியல் எஸ்டேட் விலை கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு விலை அதிகரிக்க வில்லை. 2016-ல் இதன் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா?

* ஆர்பிஐ வட்டியைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறது. கடன் ஃபண்டுகள் கடந்த ஆண்டில் சிறப்பான வருமானம் தரவில்லை. இவை இனி எப்படி செயல்படும்?

* 2014-ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை 30 சதவிகித அளவுக்கு சிறப்பான வருமானத்தை தந்தது. 2015-ம் ஆண்டில் இது -5 சதவிகிதமாக இருக்கிறது. 2016-ம் ஆண்டில் சந்தை ஏறுமுகமாக இருக்குமா?
 
எதிர்பார்ப்புகள் இப்படி பலவாறாக இருந்தாலும், இவற்றை நிறைவேற்ற முயற்சிக்கும் திட்டங்களை இனி தீட்டுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்