2016 தொழில்துறை - இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

சோ.கார்த்திகேயன்

டந்து முடிந்த 2015-ல் தொழில் துறை வளர்ச்சி சுமாராகவே இருந்திருக்கிறது. இந்த நிலையில், எதிர்வரும் 2016-ம் ஆண்டு தொழில் துறைக்கு எப்படி இருக்கும் என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வியை பல்வேறு தொழில் துறையை சேர்ந்தவர்களிடம் கேட்டோம். முதலில் கொடிசியா அமைப்பின் முன்னாள் தலைவர் இளங்கோவிடம் பேசினோம். சீனாவினால் இந்திய தொழில்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொன்னார் அவர்.

ஆட்கள் உண்டு! ஆர்டர் இல்லை!


‘‘2015-ம் ஆண்டு தொடக்கத்தில் முதல் நான்கு மாதங்களுக்கு மின் பிரச்னை இருந்தது. 2015 ஆரம்பத்தில் ஆட்கள் பற்றாக்குறை சிறிதளவில் இருந்தது. ஆனால், இப்போது பரவாயில்லை. இதற்குமுன் மூலப்பொருட்கள் பற்றாக்குறை இருந்தது. இப்போது அதுவும் இல்லை. இப்போது இருக்கும் ஒரே பிரச்னை ஆர்டர்கள் குறைவாக இருப்பதுதான். 2015-ல் ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவது என்பது முந்தைய ஆண்டுகளைவிட குறைவாகவே இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து கொண்டே வருகிறது. சீனாவின் பொருளாதாரம் குறைந்துள்ளதால், அவர்கள் தீவிரமாக ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவின் ஏற்றுமதியும் பாதிப்படைந்துள்ளது. கோவையில் முக்கியமான தொழில் மோட்டார் பம்புகள் உற்பத்திதான். இந்தியா முழுக்க கோவையிலிருந்துதான் மோட்டார் பம்புகளை தயார் செய்து தந்தோம். ஆனால், இப்போது சீன பம்புகள்  இந்தியா முழுக்க இறக்குமதி செய்யப்படும் நிலை உருவாகிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்