என் குழந்தைகளை டாக்டர்-இன்ஜினீயர் ஆக்கணும்!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்து சூரியா

ரோட்டைச் சேர்ந்த சிவகணேஷிடமிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். காரணம், அவர் தனது குடும்ப வருமானத்திலிருந்து 40-45% வரை சேமிக்கிறார். அவருடைய குடும்ப வருமானம் எவ்வளவு தெரியுமா? ரூ.15,000 மட்டுமே. எப்படி இது சாத்தியம் என்பதை அவரே சொன்னார்.

‘‘நான் எம்.ஏ படித்துள்ளேன். தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுன்ட்டன்ட்டாக வேலை பார்க்கிறேன். எனக்கு வயது 34. என் மனைவி வாணி பிளஸ் டூ படித்திருக்கிறார். டெய்லரிங் மூலம் மாதம் ரூ.3,000 வரை சம்பாதிக்கிறார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் மோனிகாஸ்ரீக்கு ஆறு வயது; இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். சின்னவள் கனிஷ்காஸ்ரீக்கு நான்கு வயது; யூ.கே.ஜி படிக்கிறாள்.

தவிர்க்க முடியாத சூழல் தவிர, நான் வருமானத்துக்குள் தேவைகளை அமைத்துக்கொள்ளவே முயற்சி செய்வேன். ஆனால், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அப்பாவுக்கு சிகிச்சை செய்த விதத்தில் ரூ.2 லட்சம் கடன் வாங்கினேன். கடந்த வருடமே என் அப்பா இறந்துவிட்டார். கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்ததுபோக இன்னும் ரூ.1.30 லட்சம் ரூபாய் பாக்கி  உள்ளது. அதற்கு வட்டியாக மாதம் ரூ.2,000 கட்டி வருகிறேன். ஓவர்டைம் வேலை செய்வதன் மூலம் வரும் தொகையில் வட்டியைச் செலுத்துகிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்