இது முதலீடு பண்ணவேண்டிய காலம்!

ஷேருச்சாமி ஆரூடம்

புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே செல்(வம்) எனக்கு போன் செய்து, ‘‘அறிவு, ஷேருச்சாமியை எப்போ போய் பார்க்கலாம்?’’ என பரபரத்தான். அவன் தொல்லை தாங்க முடியாமல், ‘‘ஏம்ப்பா இப்படி நச்சரிக்கிறே?’’ என்று கேட்டேன். 

‘‘2014 கடைசியிலேயே சாமி சொன்னாரு, 18-36 மாச காலத்துக்கு சந்தை அப்பப்ப வீக்காகி சரியாக வாய்ப்பிருக்குது. அதனால 18  மாசத்துக்கு குறைவா முதலீடு பண்றதா இருந்தா, சந்தைப் பக்கமே யாரும் வரக்கூடாதுன்னுஅதை கேக்காம நான் கொஞ்சம் அகலக்கால் வைச்சுட்டேன்; அதனாலேதான்...’’ என்று இழுத்தான் பரம்பரை டிரேடிர் - கம் - இன்வெஸ்ட்டாரான செல் என்கிற செல்வம்.

நான் செல் அளவுக்கு அகலக்கால் வைக்கவில்லை என்றாலும் 2016-ல் பங்கு முதலீடு லாபம் தருமா, தராதா என்பதை தெரிந்துகொள்ள எனக்கும் ஆர்வம்தான். புது வருஷம் பிறந்திருக்கும் இந்த சமயத்தில் எல்லாருக்கும் அப்படி ஒரு கேள்வி இருக்கும்தானே! எனவே, கொஞ்சம் சுயநலமும், கொஞ்சம் பொதுநலமும் கருதி, ஷேருச்சாமிக்கு போன் போட்டேன். போன் போன ஜோரில் கட்டானது. என்னாச்சு, சாமி ஊர்ல கீர்ல இல்லையா என்று யோசிப்பதற்குள், ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. ‘புத்தாண்டு அன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்துவிடவும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார் சாமி.

புத்தாண்டு அன்று காலையில் எழுந்து, குளித்து, கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு, சாமியைப் பார்க்க அவரது பங்களாவுக்கு நானும் செல்லும் போனோம். பங்களாவுக்குள் நுழைந்ததுமே எங்களை வரவேற்ற சாமியின் சமையல்காரர் ஹாலில் உட்கார வைத்து,  ‘‘சாமி இப்ப வந்துடுவாரு.  கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ’ என்று சொல்லி சூப்பரான ஃபில்டர் காபி கொடுத்தார்.

காபியை குடித்து முடிப்பதற்குள்ளாகவே வழக்கமான வெடிச்சிரிப்புடன், ‘‘வாங்க பசங்களா, எப்படி இருக்கீங்க’’ என்று கேட்டபடி வரவேற்றார் சாமி. நல்லா இருக்கோம்னு சொன்னா, அது பொய்யாகிடும். நல்லா இல்லேன்னு சொல்லவும் பிடிக்கவில்லை. எனவே, இருவருமே மெளனம் காத்தோம்.

‘‘என்ன சத்தத்தையே காணோம்! செல்லு, எக்கச்சக்கமா கொள்முதல் பண்ணிட்டியா என்ன?’’   என்று கண்ணைச் சிமிட்டி சிரித்தபடி கேட்டார் சாமி. அந்தச் சிரிப்பில், என்னதான் முன்னெச்சரிக்கையா சந்தையின் போக்கைச் சொன்னாலும், வலியப் போய் சிக்குற வேலையை கரெக்டா செஞ்சுடுவீங்களே! என்கிற கிண்டல் தெரிந்தது. ஆமா என்கிற தொனியில் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் செல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்