ஷேர்லக்: ஏறினால் 35000... இறங்கினால் 22200...

‘‘விஷ் யூ எ ஹாப்பி நியூ இயர்’’ என்று வாழ்த்து சொன்னபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். அவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு, உட்கார வைத்தோம். இந்த ஆண்டுக்கான அஸெட் அலோகேஷன் பற்றி மாறனின் கட்டுரை, இந்த ஆண்டு பங்குச் சந்தை எப்படி இருக்கும் என ஷேருச்சாமியின் ஆரூடம்... சூப்பர்! என் வேலையை இந்த இதழில் வெகுவாகக் குறைத்துவிட்டீரே! மிக்க நன்றி’’ என்றவர், நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரானார்.

 ‘‘2015-ல் இந்தியப் பங்குச் சந்தைகள் நெகட்டிவ் வருமானம் தந்திருக்கின்றனவே?’’ என்று சற்றுக் கவலை யுடன் கேட்டோம்.

 ‘‘கடந்த ஓராண்டில் நிஃப்டி 4% மற்றும் சென்செக்ஸ் 5% இறக்கம் கண்டிருக்கிறது. இதையே டாலர் மதிப்பில் குறிப்பிட்டால் முறையே 8.4% மற்றும் 9.3 சதவிகிதமாக இருக்கிறது.

இதே காலத்தில் சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 9.41%, கொரியாவின் கோஸ்பி 2.39% அதிகரித்துள்ளது. மற்றபடி ஹேங்செங்(மைனஸ் 7%), தைவான் தைய்க்ஸ் (மைனஸ் 10%), ஜகர்தா காம்போசைட் (மைனஸ் 12%), பிரேசில் போவெஸ்பா (மைனஸ் 13%) இறக்கம் கண்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்