பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்..!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்

இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகள்     2015-ம் ஆண்டு  கடைசி வர்த்தக தினம் மற்றும் 2016-ம் ஆண்டின் முதல் வர்த்தக தினத்தில் பாசிட்டிவ்வாக  முடிந்திருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக சந்தையின் போக்கில் ஒரு தயக்கம் காணப்பட்டது. (மாத சார்ட்டில் சிறிய அளவிலான கேண்டில் பேட்டன் தொடர்ந்து காணப்பட்டது). குறியீடுகள் இறங்கவில்லை என்றால் அதனை பாசிட்டிவ் டிரெண்ட்-ஆக எடுத்துக் கொள்ளலாம். முக்கிய சென்டிமென்ட் நிலை நிஃப்டிக்கு சுமார் 8000-ஆக உள்ளது. இந்த நிலைக்கு சந்தை மீண்டும் வந்தால், சந்தை காளையின் பிடிக்கு வரும்.

இந்த நிலையில் சில நல்ல செய்திகள் வந்தால், சந்தையின் ஏற்றத்துக்கு நிச்சயம் உதவும். இண்டெக்ஸ் உயர்வதற்கு ஐடி மற்றும் வங்கி பங்குகளின் விலை அதிகரிக்க ஆரம்பிக்க வேண்டும் (இண்டெக்ஸ்-ல் இந்த இரு துறை நிறுவனப் பங்குகளின் வெயிட்டேஜ் சுமார் 45%). அந்த வகையில் இந்த இரு துறை நிறுவனப் பங்குகளின் மீது ஒரு கண் வைக்கலாம்.

அந்நிய நிதி முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐக்கள்) இந்தியப் பங்குகளை வாங்க ஆரம்பித்திருப்பது நல்ல அறிகுறியாகும்.  இண்டெக்ஸ் ஃப்யூச்சர்ஸ்-ல் எஃப்ஐஐகளின் பொசிஷன்கள் அதிகரித்துள்ளன. இது நிலைபெற்று புத்தாண்டில் சந்தை மீண்டும் ஏறத்தொடங்கும் என்கிற நம்பிக்கை உருவாகி இருக்கிறது.

இண்டெக்ஸ் புள்ளிகள் உயரும்போது, நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 8045-ஐ நோக்கி மேம்படும். பேங்க் நிஃப்டி 17500-க்கு ஏறும். லாங்க் பொசிஷன்கள் போக முறையே 7900 மற்றும் 16850 ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ளவும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்