பிசினஸ் சீக்ரெட்ஸ் - 28

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தொழில் முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்மனதில் உறுதி வேண்டும்!‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

ரு தொழில் ஜெயிப்பதற்கு அடிப்படை தேவையாக இருப்பது அந்த தொழிலை செய்கிறவரின் மனோபாவம்! இதை ‘மைன்ட் செட்’ அல்லது ‘ஆட்டிட்யூட்’ என்று சொல்லலாம். இந்த மனோபாவம் மட்டும் சரியாக அமைந்துவிட்டால், ஒருவர் எந்த தொழிலை தொடங்கினாலும், அதில் ஜெயிப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. இந்த மனோபாவம் எப்படிபட்டதாக இருக்கவேண்டும் என்பதை சொல்கிறேன்.

தப்பிக்க நினைக்கக் கூடாது!

ஒரு தொழில்முனைவோர் என்பவருக்கு பிரச்னையிலிருந்து தப்பிக்க நினைக்கும் மனோபாவம் இருக்கவே கூடாது. பிசினஸ் செய்ய இறங்கிவிட்டால், பிரச்னைகளுக்கு பஞ்சமே இருக்காது.

தினமும் ஏதாவது ஒரு ரூபத்தில் பல பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கும். இந்தப் பிரச்னைகளை எல்லாம் நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று மட்டும் ஒருநாளும் தயங்கி நிற்கக் கூடாது.

நான் பல பிசினஸ்மேன்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் பல பிரச்னைகளில் சிக்கித் தவிப்பது  நன்றாக தெரியும். ஆனால், அதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கிற துணிச்சல்கூட இல்லாமல் இருப்பார்கள். யாராவது அந்தப் பிரச்னை பற்றி பேசினால், ‘‘அய்யோ! அதை ஞாபகப்படுத்த வேண்டாம்’’  என்பார்கள்.

எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயங்கி நிற்கும்போதோ அல்லது அதை சந்திக்க முடியாமல் தப்பிக்க நினைக்கும்போதோ, அது பெரிதாகவே செய்கிறது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி, அதை நேருக்கு நேராக சந்தித்து, தீர்வு காண்பேன் என்கிற மனத் துணிச்சலுடன் நீங்கள் இருந்தால், அந்தப் பிரச்னையை உங்களால் நிச்சயம் தீர்க்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்