சீனாவைக் கண்டு பயம் வேண்டாம்!

ஹலோ வாசகர்களே..!

ந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, அதாவது கடந்த ஒரு வார காலமாக உலக அளவில் பங்குச் சந்தைகள் சரிந்தபடி உள்ளன. இந்த சரிவுக்கு முக்கிய காரணம், சீனாதான். சீனப் பொருளாதார வளர்ச்சி சமீப காலமாக இல்லாத அளவுக்கு குறைந்ததால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சீன பங்குச் சந்தை வர்த்தகமாவது இரு முறை நிறுத்தப்பட்டது. சீன பங்குச் சந்தை குறியீடான ஹேங்செங் கடந்த ஒரு வாரத்தில் 6.67% சரிந்தது. இதனால் நம்முடைய பங்குச் சந்தைகளும் சுமார் 5% வரை சரிந்துள்ளது.

2008-ல் அமெரிக்காவில் சப்-ப்ரைம் பிரச்னை காரணமாக பங்குச் சந்தைகள் சரிந்தது போல, தற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள சரிவினால், மீண்டும் பங்குச் சந்தைகள் மிகப் பெரிய இறக்கம் கண்டுவிடுமோ என முதலீட்டாளர்கள் பயப்படவே செய்கின்றனர். ஆனால் நம் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியின் மீதும், பங்குச் சந்தைகளின் மீதும் நம் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரித்து வருவதையே புள்ளிவிவரங்கள் எடுத்துச் சொல்கின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை நம் சந்தையிலிருந்து வெளியே எடுத்தாலும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் புதிதாக அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாத இறுதி நிலவரத்தின்படி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த தொகை சுமார் 13.39 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. மியூச்சுவல் ஃபண்டிலும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு அதிகரித்து வருவது, தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட நம்மவர்களுக்கு மூலதன சந்தை மீது நம்பிக்கை அதிகரித்து வருவதையே காட்டுகிறது. மேலும் உலக வங்கி இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவிகித அளவில் வளர்ச்சியடையும் என தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்