பத்திரம் தொலைந்துபோனால் என்ன செய்வது?

கேள்வி - பதில்

? 110 வருடங்களுக்குமுன் பதிவு செய்யப்பட்ட என் இடத்தின் பத்திரம் தொலைந்துவிட்டது. தொலைந்து போன பத்திரத்தை திரும்ப பெறுவதற்கு வழிமுறைகள் என்ன?

பாரதி,

கே.அழகுராமன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.


“110 வருடங்களுக்குமுன் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் உங்கள் பெயர் இருக்க வாய்ப்பில்லை. அது உங்கள் பெயரில் ஏற்பட்ட பத்திரத்தின் மூலப் பத்திரமாகும் (Parent Document). அப்போது அந்த ஆவணம் பதிவாகி இருந்த சார்பதிவகம் எது என அறிந்து முதலில் அங்கு அந்தப் பத்திரத்தின் எண்ணைக் குறிப்பிட்டு ஒரு சான்றிட்ட நகலை (Certified Copy of Sale Deed) வாங்கவேண்டும்.

பின்னர் மூலப்பத்திரம் தொலைந்து போனது குறித்து போலீசில் ஒரு புகார் கொடுத்து, கண்டுபிடிக்க இயலவில்லை என ஒரு சான்றிதழ் (Non Traceable Certificate) பெற்றுக்கொண்டு, வழக்கறிஞர் மூலமாக செய்தித்தாளில் ஒரு அறிவிப்பும் செய்துவிட்டு, இவை அனைத்தையும் இணைத்து, தொலைந்து போன பத்திரத்துக்கு பதிலாக பயன்படுத்தலாம். இப்படிச் செய்வது சட்டப்படி அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்