2016 எனக்கு என்ன லாபம்?

கூடுதல் வரவும் கூடுதல் சுமையும்!குறுந்தொடர்-1பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

புதிய ஆண்டு தொடங்கிவிட்டது. எல்லார் மனங்களிலும் இயல்பாகவே எழுகிற கேள்வி... 2016 எப்படி இருக்கும்..? குறிப்பாக, எனக்கு? என் குடும்பத்துக்கு..?

இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் இருக்கின்றன.ஒரு பிரிவினர், நம் நாடு 7 சதவிகிதத்துக்கும் மேலான வளர்ச்சியைக் கண்டு வருவதாக சிலாகித்துப் பேசுகின்றனர். ‘இதே நிலை, இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும்; அதன் காரணமாக, நாம் அசுர வளர்ச்சி காணப் போகிறோம்; டெமாக்ரஃபிக் டிவிடெண்ட்,  ஜன் தன் யோஜனா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்றெல்லாம், நாலு கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம்’ என்கின்றனர். 

‘இதெல்லாம் சும்மா. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, தொடர்ந்து நன்றாக முன்னேறிக் கொண்டுதான் இருந்தோம்; இப்போது அப்படி இல்லை; உள்ளபடி பார்த்தால், 3-லிருந்து 4 % வரைதான் வளர்கிறோம். சரியான திட்டமிடல் இல்லை; சொல்கிற அளவுக்கு, கள நிலைமையில் வளர்ச்சியில்லை’ என்று வாதிடுகிறார்கள் மற்றொரு பிரிவினர்.

இரண்டு வாதங்களுமே சரி என்றே தோன்றுகின்றது! அது எப்படி இரண்டு வாதங்களும் சரியாக இருக்க முடியும்?

சில களங்களில், சில தளங்களில் - ஓடுகிறோம்; தாண்டுகிறோம்; சாதிக்கிறோம். இன்னும் பிற துறைகளில், நத்தை மாதிரி ‘நகர்கிற’ வளர்ச்சிதான் சாத்தியம் ஆகியிருக்கிறது. சில எதிர்பார்ப்புகள் மெய்யாகும்; அதனால் 7 சதவிகிதத்துக்கும் மேல் வளர்ச்சி ஏற்படும் என்பது ஒரு பார்வை. பல கணக்குகள் பிசகிப் போகவே சாத்தியங்கள் அதிகம்; ஆகவே, 3% வளர்ச்சியேகூட அரிதாகலாம் என்பது பிறிதொரு கோணம்.

ஆக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசினாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் மறுக்க முடியாது. அதுதான் வளர்ச்சி. வளர்ச்சி விகிதம் மாறலாம்; மற்றபடி, வளர்ச்சிதான்; வீழ்ச்சியில்லை என்பதுதான் அது. இந்த வளர்ச்சியின் காரணமாக, தனி நபரின் வருமானம் உயருமா? குடும்பங்கள் வளர்ச்சி பெறுமா? இது ஒரு ‘மில்லியன் டாலர்’ கேள்வி.

நாடு வளர்ந்தால்தான் குடும்பங்கள் வளரும். அதேபோல, குடும்பங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும். குடும்பம் என்பதே,  தனிநபர்களின் கூட்டுதானே? ஆக, நாட்டு வளர்ச்சி என்றால், அது குடும்பங்களின், தனிநபர்களின் வளர்ச்சியாகத்தானே இருக்க முடியும்? அப்படித்தான் இருந்தாக வேண்டும். ஆனால், இல்லை என்பதுதான் சிலரின் கவலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்