பொற்காலம் ஆரம்பம்!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்து சூரியா

பொதுவாக, வேலைக்குச் சேர்ந்தவுடனேயே நிதித் திட்டமிடல் செய்து அதனை பக்காவாக ஃபாலோ செய்கிறவர்கள் பொருளாதார ரீதியாக உருவாகக்கூடிய எந்தவிதமான வாழ்க்கை நெருக்கடிகளையும் மிகச் சுலபமாகச் சமாளிப்பார்கள். திருமணத்துக்கு முன்கூட்டியே நிதித் திட்டமிடலை செய்துகொள்பவர்களும் சுலபமாக வாழ்க்கையை எதிர்கொள்வார்கள். இதைத் தவறவிட்டவர்கள் திருமணத்துக்குப் பிறகு முதல் ஐந்து வருடங்களுக்குள்ளாவது நிதித் திட்டமிடலை அவசியம் செய்துகொள்ள வேண்டும்.

சிதம்பரம் கொள்ளி டத்தைச் சொந்த ஊராகக் கொண்ட பிரசாத் வேலை நிமித்தமாக தற்போது சென்னையில் குடும்பத்துடன் வசிக்கிறார்.திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஏற்கெனவே அவராகவே திட்டமிட்டு சில விஷயங்களைச் செய்து வருகிறார். இப்போது, தான் செய்துவருவது சரிதானா, இன்னும் எப்படியெல்லாம் திட்டமிட்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என கேட்டு நமக்கு மெயில் அனுப்பியிருந்தார். அவர் சொல்வதைக் கேட்போம்...

‘‘நான் சென்னையில் உள்ள ஆட்டோமொபைல் மேனுஃபேக்சரிங் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறேன். எனது மாதச் சம்பளம் ரூ.52,000. குடும்பச் செலவுகள் ரூ.40,000 ஆகிறது. மீதம் உள்ள 12,000 ரூபாயை வங்கிக் கணக்கிலேயே வைத்துக்கொள்கிறேன். இன்ஷூரன்ஸ் பிரீமியங்கள், பென்ஷன் ஸ்கீம் தொகை செலுத்த அவ்வப்போது எடுத்துக்கொள்கிறேன். பணி மாறும்போது, பி.எஃப் தொகையை வெளியே எடுத்துவிட்டதால், எனது பிஎஃப் கணக்கில் ரூ.26,000 மட்டுமே இப்போது இருக்கிறது.

' என் மனைவி பார்கவி, எம்.எஸ்சி மைக்ரோ பயாலஜி படித்திருக்கிறார். தற்போது குடும்ப நிர்வாகத்தை கவனித்துக்கொள்கிறார். வேலைக்காக முயற்சி செய்து வருகிறார். எப்படியும் ஒரு வருடத்தில் வேலைக்கு போகும் வாய்ப்பு உருவாகலாம். குறைந்தபட்சம் ரூ.20,000 சம்பளம் கிடைக்கலாம். எங்கள் மகன் ராகவ் ஸ்ரீநிவாஸுக்கு இரண்டு வயது முடிந்துவிட்டது. விரைவில் அவனை பள்ளியில் சேர்க்க இருக்கிறோம்.

முக்கியமான விஷயம், அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறோம்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு எனக்கு உண்டு. விரைவில் சென்னை புறநகர் பகுதியில் வில்லா டைப் வீடு ஒன்று வாங்க நினைத்துள்ளேன்.அதற்கு ரூ.40 லட்சம் தேவையாக இருக்கும். பையனின் மேற்படிப்புக்கு அடுத்த 15 வருடத்தில் ரூ.35 லட்சம் தேவையாக இருக்கும். அவனுடைய திருமணத்துக்கு அடுத்த 26 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் இருந்தால், சிறப்பாக நடத்த முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்