ரிலையன்ஸ்-ஏர்செல்-எம்.டி.எஸ். இணைப்பு: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்கை வாங்கலாமா?

மு.சா.கெளதமன்

த்தனை நாளும் தனித்தனியாக செயல்பட்டு வந்த ஏர்செல் மற்றும் எம்.டி.எஸ். நிறுவனங்கள் இனி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படியொரு இணைப்பு நடக்கும்பட்சத்தில், இந்திய தொலைதொடர்புத் துறையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (சுருக்கமாக, ஆர்.காம்) நிறுவனம் பலமாக கால் பதிக்க  உதவும். 

அந்த நிலையில், ஆர்.காம் நிறுவனத்துக்கு இந்த இணைப்பு எந்த வகையில் சாதகமாக இருக்கும் என ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை அனலிஸ்ட் (ஹெட் - ரிசர்ச்) ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

கட்டுமான வசதிகளை பகிர்ந்துகொள்வது!

1.‘‘தொலைதொடர்பு சாதனங்களில் முக்கியமான ஆப்டிக் ஃபைபர் கேபிள்களை (Optic fibre cable) ஆர்.காம் நிறுவனத்தினால் இந்தியாவில் உள்ள 21,000 நகரங்களுக்கும், 4,00,000 கிராமங்களுக்கும் கொண்டு செல்ல இயலவில்லை. தற்போது ரிலையன்ஸ் ஜியோவோடு இணைந்து செயல்படுவது மட்டுமல்லாமல் ஏர்செல் மற்றும் எம்.டி.எஸ் நிறுவனத்தையும் தன்னோடு இணைத்துக் கொள்வதால், ஆர்.காமின் செயல்பாடு இந்தியாவில் கணிசமான அளவுக்கு அதிகரிக்கும்.

2. இந்திய நகரங்களுக்கு மத்தியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள்களை பகிர்ந்துகொள்ள ரூ.12,000 கோடிக்கும், நகரங்களுக்குள் உள்ள ஆப்டிக் ஃபைபர் கேபிள்களை பகிர்ந்துகொள்ள ரூ3,000 கோடிக்கும், அதோடு செல்போன் டவர்களை பகிர்ந்துகொள்ள ரூ.12,000 கோடிக்கும் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

3. ஆர்.காம் தனது செயல்பாட்டை இந்திய சந்தையில் அதிகரிக்கவும், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை பகிர்ந்துகொள்ளவும் ஜியோ மற்றும் வோடாபோன் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்