நிஃப்டி எதிர்பார்ப்புகள்: டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்த்துப் போகலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

வாலட்டைலிட்டி அதிகரிக்கலாம் என்றும் வால்யூம் குறைவாக நடக்க ஆரம்பித்துள்ள இந்த நிலை தொடர்ந்தால் மேல் நோக்கிய பயணத்தை நிஃப்டி தொடர்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கும் என்றும், செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.  நான்கு நாட்கள் இறக்கத்துடனும் ஒரே ஒரு நாள் ஏற்றத்துடனும் முடிவடைந்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 361 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது.

சீனா மற்றும் உலக சந்தைகளின் இறக்கத்தினால் படுவேகமான வீழ்ச்சியைச் சந்தித்த நிஃப்டி மீண்டும் ஸ்திரமானதொரு நிலைமையை அடைய இரண்டுக்கும் மேற்பட்ட வால்யூமுடன் கூடிய பாசிட்டிவ் குளோஸிங்குகள் நடக்கவேண்டும். இது போன்ற சூழல்களில் டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்யாகிப்போகும். எனவே, டெக்னிக்கல் டிரேடர்களுக்கு வரும் வாரம் சவாலான வாரமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். செய்திகள் பாசிட்டிவ்வாக வராத வரையில் பாசிட்டிவ் மூவ்களை எதிர்பார்த்து டிரேடிங் செய்வதை முழுமையாக தவிர்க்கவும். ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் வேகமான இறக்கம் வரும் வேளையில் நல்ல ஃபண்டமென்டல்கள் உள்ள ஸ்டாக்குகளில் ஒரு சிறிய ரெக்கவரியை எதிர்பார்த்து சிறிய எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் லாங் சைட் வியாபாரம் மட்டுமே செய்யலாம். நிஃப்டியில் வியாபாரத்தை தவிர்ப்பதே நல்லது. ஓவர் நைட் வியாபாரத்தையும் ஷார்ட் சைட் வியாபாரத்தையும் தவிர்ப்பது சரியான ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். வாரத்தின் மத்தியில் ட்ரெண்ட் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்