பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்..!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்

கடந்த வாரத்தில் சீனாவில் ஏற்பட்ட பொருளாதார நிகழ்வுகள், இந்தியப் பங்குச் சந்தை மற்றும் ஒட்டு மொத்த உலக பங்குச் சந்தைகளை ஆட்டம் காண வைத்தது. வெள்ளிக்கிழமை சீனச் சந்தை கட்டுபாட்டுக்குள் வந்ததால் சென்செக்ஸ் 82 புள்ளிகள் ஏறி இருப்பது அடுத்த வாரம் சந்தை கொஞ்சம் நிலையாக இருக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

அடுத்த வாரம் ஆரம்பித்து டிசம்பர் காலாண்டு முடிவுகள் வர இருக்கின்றன. இம்முறை எதிர் பார்ப்புகள் குறைவாக இருப்பதால், ஏமாற்றத்துக்கான வாய்ப்புகளும் குறைவே. சந்தையில் ஏற்ற இறக்கத்தை எதிர்பார்க்கலாம் என்றாலும் அது வரும் வாரம் முதல் வேறுபட்டதாக இருக்கும்.

கடந்த வார சந்தை இறக்கம் நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டியின் குறுகிய கால போக்கில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவை மீண்டும் முதலீட்டுக்கு ஏற்றவையாக மாற சில பழுது பார்ப்புகள் நடக்க வேண்டும். இதற்கு நிஃப்டி ஃப்யூச்சர் பழைய 7730 நிலைக்கு உயர வேண்டும். இதேபோல், பேங்க் நிஃப்டி 16500க்கு உயர வேண்டும். இது நடக்கும் வரைக்கும், இந்த நிலைகளை வார ரெசிஸ்டன்ஸ் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். சந்தை இப்படி ஏறவில்லை என்றால், இரு வழி டிரெண்ட் காணப்படும். எனவே, கவனத்துடன் டிரேட் செய்யவும். உறுதி செய்யப்பட்ட பிறகே பொசிசன்கள் எடுக்கவும். மிகவும் அக்ரெஸிவான டிரேடர்கள் மேலே கூறப்பட்ட ரெசிஸ்டன்ஸ் நிலையை கவனத்தில் கொண்டு வர்த்தகத்தில் செல்லலாம். 

எம்டி எஜூகேர் ( MTEDUCARE): வாங்கவும்.


தற்போதைய விலை: ரூ.183

சந்தையில் கல்வித் துறை சார்ந்த பங்குகள் நன்றாக விலை ஏறி வருகிறது. பட்டியலிடப்பட்டதிலிருந்து எம்டி எஜூகேர்  பங்கு விலை நிலையாக அதிகரித்து வருகிறது. அண்மை வாரங்களில் இந்தப் பங்கில் மிகச் சிறப்பான ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. அதாவது, இந்தப் பங்கில் புதிய முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து மேல் நோக்கிய பிரேக் அவுட் மற்றும் நல்ல விலை ஏற்றம் மற்றும் வால்யூம் அதிகரிப்பு காணப்படுகிறது. ரூ. 165-170 விலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். பங்கின் விலை ரூ. 220க்கு அதிகரிக்க கூடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்