கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

ஜெ.சரவணன்

டந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பண்டிகைகள் இருந்தபோதும் விவசாய பொருட்களின் வர்த்தகத்தில் பெரிய வளர்ச்சி எதுவும் நடக்கவில்லை. இந்த வாரம் சென்னா விலைப் போக்கு குறித்து இண்டிட்ரேட் கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ்குமார் விளக்குகிறார்.

மஞ்சள் (Turmeric)

கடந்த வாரத்தில் முக்கிய சந்தைகளில் மஞ்சளின் தேவை வழக்கமான நிலையைவிட குறைந்ததால், விலையும் குறைந்து வர்த்தகமானது. கமாடிட்டிகளில் எப்போதும் வலிமையான ஒன்றாக கருதப்படும் மஞ்சள் சில மாதங்களாகவே விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில், வரும் ஜனவரி கடைசி வாரத்தில் புதிய அறுவடை மஞ்சள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முக்கியச் சந்தைகளில் வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது. ஆனால், தற்போது மஞ்சள் விளைச்சலைக் குறைக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து விலை குறைந்து வருவதும், மஹாராஷ்ட்ரா மற்றும் ஆந்திராவில் நிலவும் வறட்சியும் இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. என்சிடிஇஎக்ஸ் சந்தையில் ஏப்ரல் மாத ஃப்யூச்சர்ஸ்க்கான குவிண்டால் மஞ்சள் ரூ.9,896 என்ற நிலையில் வர்த்தகமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்