புள்ளிவிவரங்கள் வெறும் எண்கள் அல்ல!

ஹலோ வாசகர்களே..!

டந்த வாரத்தில் வெளியான தொழில் துறை உற்பத்திக் குறியீடும் (IIP), நுகர்வோர் பணவீக்க குறியீடும் (CPI) முதலீட்டாளர்களிடம் அதிர்ச்சியையே ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இரண்டு குறியீடுகளில் முதலாவது குறைந்தும், இரண்டாவது அதிகரித்தும் இருப்பது உள்ளபடியே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம்தான்.

கடந்த நவம்பர் மாதத்துக்கான தொழில் துறை உற்பத்திக் குறியீடு 3.2 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் இது  9.8 சதவிகிதமாக இருந்தது.  கடந்த 13 மாதங்களில் ஏற்றத்திலேயே இருந்த இந்தக் குறியீடு தற்போது முதல் முறையாக இறங்கி உள்ளது.  இப்போது வந்திருக்கும் இந்த புள்ளிவிவரம் கொஞ்சம் மாறலாம்.  எனவே, இதை பார்த்து பயப்பட வேண்டாம் என்கிறார்கள் சில பொருளாதார நிபுணர்கள். கடந்த நிதி ஆண்டில் இந்தக் குறியீட்டின் வளர்ச்சியானது 2.5 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இந்த நிதி ஆண்டில் இந்தக் குறியீட்டின் வளர்ச்சி 3.9 சதவிகிதமாக இருக்கிறது. ஆக, நாம் வளர்ச்சியின் போக்கில்தான் இருப்பதாகவும் சொல்கிறார்கள் அவர்கள்.

இது இப்படி இருக்க, நுகர்வோர் பணவீக்கக் குறியீடு கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து அதிர வைத்திருக்கிறது. கடந்த நவம்பரில் 5.41 சதவிகிதமாக இருந்த இந்தக் குறியீடு, கடந்த டிசம்பரில் 5.61 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பின்படி, இது 5 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. ஆனால், இது தொடர்ந்து அதிகரித்து வருவதால், வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டு்ள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்