கரன்சி வர்த்தகம்... ஆன்லைனில் எப்படி செய்வது?

கேள்வி - பதில்

? ஆன்லைனில் கரன்சி வர்த்தகம் எப்படி செய்வது ?

@ -ஜெயக்குமார்,

தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

“கரன்சி வியாபாரம் என்பது வெளிநாட்டு நாணயங்களான அமெரிக்காவின் டாலர், ஐரோப்பாவின் யூரோ, ஜப்பானின் யென் மற்றும் இங்கிலாந்தின் பவுண்ட் போன்றவற்றை இந்திய நாணய மதிப்பில் ஏறும் என்று நம்பும்போது வாங்கி விற்பது, இறங்கும் என்று நம்பும்போது விற்று வாங்குவதாகும். இதை நம் நாட்டில் உள்ள பி.எஸ்.இ., என்.எஸ்.இ., எம்சிஎக்ஸ் எஸ்எக்ஸ் (MCXSX) போன்ற எக்ஸ்சேஞ்சுகளில் வர்த்தகம் செய்யலாம். இந்த எக்ஸ்சேஞ்சுகளில் வியாபாரம் செய்ய, இவர்களிடம் உறுப்பினராக (புரோக்கர்) உள்ளவர்களிடம் கணக்கு துவங்க வேண்டும். நீங்கள் கணக்கு துவக்கிய புரோக்கர் உங்கள் கம்ப்யூட்டரில் டிரேடிங் சாஃப்ட்வேரை போட்டுக் கொடுப்பார். உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட்டுடன் இணைத்து, புரோக்கர் போட்டுக் கொடுத்த டிரேடிங் சாஃப்ட்வேர் மூலமாக நீங்கள் ஆன்லைனில் கரன்சி வர்த்தகம் செய்யலாம். பணம் கொடுத்தல், வாங்கல் போன்றவற்றையும், உங்களுக்கு நெட் பேங்கிங் வசதி இருந்தால், அதன் மூலம் செய்யலாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்