எப்போதும் கைகொடுக்கும் எஃப்எம்சிஜி & பார்மா துறைகள்!

ஒரு பாசிட்டிவ் பார்வைவி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், மணி அவென்யூஸ் (Money Avenues)

ங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் பல்வேறு உத்திகளைக் கடைபிடித்தால் மட்டுமே நீண்ட காலத்தில் பங்குச் சந்தையில் வெற்றி பெற முடியும் என்பது அடிப்படை விதி.

பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது ஒரு முக்கிய குறிக்கோளாக இருந்தாலும், சரியான துறைகளில் முதலீடு செய்யும்போதுதான் ஏற்ற இறக்கத்தை சமாளித்து அதற்கேற்ப லாபம்  சம்பாதிக்கவும் முடியும். அந்த அடிப்படையில் பங்குச் சந்தையில் காலச் சூழலுக்கேற்றவாறு பல துறைகள் நல்ல ஏற்றத்திலும் பல துறைகள் இறக்கத்திலும் இருந்துவருவதைக் கடந்த காலங்களில் நாம் கண்டிருப்போம்.

ஏழு, எட்டு வருடங்களுக்கு முன்  ரியல் எஸ்டேட் துறையும் இன்ஃப்ரா துறையும் முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் பெருத்த லாபத்தை தந்தன. கடந்த சில வருடங்களாக அவற்றின் போக்கு தலைகீழாக மாறி, முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதைப் பார்த்தோம். ஆனால், சில துறைகள் இது போன்ற கடுமையான ஏற்ற இறக்கத்தில் சிக்காமல், ஒரே சீரான வளர்ச்சியில் இருந்து வந்ததையும் கடந்த பல வருடங்களாக பார்த்துவருகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்