கனவுகள நிஜமாகுமா?

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்து சூரியா

திருமணத்துக்கு  முன்பே  நிதித்  திட்டமிடல் செய்துகொள்வது நிம்மதியான வாழ்க்கையை  அமைத்துக்கொள்ள  வழிவகுக்கும்  என்பார்கள். வெகு சிலரே முன்யோசனையுடன் அப்படி திட்டமிடுகிறார்கள்.  அந்த வகையில் விருதுநகரைச் சேர்ந்த 26 வயதாகும் அம்பிகைபாலனை பாராட்டவே வேண்டும். சம்பாதிக்க தொடங்கியவுடனேயே சில விஷயங்களை தானாகவே பொறுப்புடன் செய்துவரும் நிலையில், இப்போது முறையான நிதித்  திட்டமிடலுக்கு தயாராகியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்...

‘‘நான் டிப்ளமோ படித்துவிட்டு, டில்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறேன். பிடித்தங்கள் போக என் மாதச் சம்பளம் ரூ.41,000. அப்பா, மளிகைக் கடை வைத்திருந்தார். கடந்த ஆண்டு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அம்மா, கடையொன்றில் அக்கவுன்டன்ட்டாக ரூ.3,000 சம்பளத்தில் வேலை பார்க்கிறார். எனது தங்கைக்கு கடந்த எட்டு மாதங்களுக்குமுன் திருமணம் ஆகிவிட்டது. தம்பி, டிப்ளமோ படித்துவிட்டு, இரண்டு வருடங்களாக சென்னையில் ரூ.10,000 சம்பளத்தில் வேலை பார்த்துவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்