ஷேர்லக்: டிசிஎஸ்ஸை முந்திய இன்ஃபோசிஸ்!

பொங்கல் திருநாளை ஒட்டி நம் அலுவலக ஊழியர்கள் பலரும் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, நாமும் வியாழன் அன்றே இதழை முடிக்கும் பணியில் பிசியாக இருந்தோம். ‘‘பொங்கல் வாழ்த்துகள்’’ என கணீரென்ற குரலில் சொன்னபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். அவரை வரவேற்று சர்க்கரைப் பொங்கலை கொடுத்தோம். ஒரு ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டவர், அருமை என்றபடி நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரானார்.

‘‘சந்தை தொடர்ந்து இறங்கி வருகிறதே! இந்த ஆண்டு முழுக்க ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்கிறார்களே!’’ என வருத்தத்துடன் கேட்டோம்.

‘‘இன்றைய தினம் நடந்த வர்த்தகத்தை வைத்துப் பார்க்கும்போது, நிஃப்டி 7450 புள்ளிகள் வரை இறங்கி வர்த்தகமானது. மதிய வேளையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு நல்ல விதமாக வெளியானதால், சந்தை மீண்டும் உயர்ந்தது. ஆனாலும் அந்த உயர்வை சந்தையால் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. சந்தை மீண்டும் இறக்கம் காணத் தொடங்கியது என்றாலும் 7500 என்கிற புள்ளிகளுக்கு  சற்று மேலேயே உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) சந்தை எப்படி இருக்கும், 7500 புள்ளிகளுக்கு கீழே செல்லுமா என்பதை வைத்தே சந்தையின் அடுத்த மூவ் இருக்கும். நிஃப்டி 7500-க்குக் கீழே செல்லும் பட்சத்தில் குறுகிய காலத்தில் 7200 புள்ளிகள் வரைகூட சந்தை இறங்க வாய்ப்புண்டு என்கிறார்கள். அவ்வளவு தூரம் குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்