பிசினஸ் சீக்ரெட்ஸ் - 30

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கனவு காணுங்கள்!தொழில் முனைவோர்களுக்குத் துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்

‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

வெற்றிகரமான பிசினஸ்மேனாக திகழ்வதற்கு ஒருவரிடம் கட்டாயம் இருந்தாக வேண்டிய மனோபாவங்கள் பற்றி பார்த்து வருகிறோம். உலகத்தில் வெற்றிகரமாக திகழ்ந்த எந்தவொரு பிசினஸ்மேனையும் எடுத்துக் கொண்டு, அவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக படித்துப் பாருங்கள்.  அவர்கள்  கனவு  காணக் கூடியவர்களாக இருந்திருப்பார்கள். பிசினஸ் தொடங்குவதற்குமுன்பு அவர்கள் சாதாரண மனிதர்களாக இருந்தபோதும், எதிர்காலத்தில் தாங்கள் என்ன மாதிரியாக வரவேண்டும் என்று கனவு கண்டிருப்பார்கள். பிற்காலத்தில் அவர்கள் உலகம் போற்றும் பிசினஸ்மேன்களாக மாறியதற்குக் காரணம், அவர்கள் கண்ட கனவுகளாகவே இருக்கும். ஆங்கிலத்தில் இதை ability to dream and convert the dream into reality என்பார்கள்.

கனவு காண்பது என்றால், தினம்  தோறும் இரவு தூங்கியவுடன் நாம் பார்க்கும் பல கனவுகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. பகல் நேரத்தில்   விழித்திருக்கும் நிலையில் நாம் காணும் கனவைப்  பற்றி சொல்கிறேன். இன்றைக்கு நான் 10 கோடி ரூபாய்க்கு டேர்ன்ஓவர்  செய்கிறேன். எதிர்காலத்தில் 1000 கோடி ரூபாய்க்கு டேர்ன்ஓவர் செய்கிற அளவுக்கு என் பிசினஸை உயர்த்த வேண்டும் என்று நாம் காண்கிற கனவு. இன்று எனக்கு ஒரு தொழிற்சாலை இருக்கிறது. எதிர்காலத்தில் பத்து தொழிற்சாலையை நான் நடத்த வேண்டும் என்று நாம் காண்கிற கனவு. இன்று நான் தமிழகத்தில் மட்டும் பிசினஸ் செய்கிறேன். எதிர்காலத்தில் நான் இந்தியா முழுக்க பிசினஸ் செய்ய வேண்டும் என்று நாம் காண்கிற கனவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்