தன் நலம் மட்டும் பார்க்கும் மத்திய அரசு!

ஹலோ வாசகர்களே..!

ச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களில் தாறுமாறாகக் குறைந்து, உலக அளவில் பங்குச் சந்தைகளை கதிகலங்க வைத்திருக்கிறது. பொதுவாக, ஒரு பொருளின் விலை குறைந்தால் எல்லோரும் மகிழ்ச்சி அடையவே செய்வார்கள். ஆனால், கச்சா எண்ணெய்யின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவில் குறைந்தபோதிலும் நம்மால் மகிழ்ச்சி அடைய முடியாததற்கு காரணம், சர்வதேச சந்தையில் அதன் விலை குறைந்த அளவுக்கு நம் நாட்டில் குறையவில்லை என்பதினால்தான்.

சர்வதேச சந்தையில் கடந்த 2014, நவம்பரில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 79 டாலர். இப்போது அதன் விலை 29 டாலர். ஒரு பீப்பாய்க்கு 50 டாலர் விலை குறைந்திருக்கிறது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சராசரி  மதிப்பு 60 என்று வைத்துக்கொண்டாலும்கூட,  மத்திய அரசுக்கு இதன் மூலம் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகி இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

ஆனால், மிச்சமான இந்த தொகையில் மக்களுக்கு எவ்வளவு தந்திருக்கிறது என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். 2014 நவம்பரில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.67.  தற்போது அதே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் சுமார் ரூ.59.50.  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.7.50-ம், ஒரு லிட்டர் டீசல் விலை சுமார் ரூ.13-ம் மட்டுமே குறைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்