யோகா பயிற்சி மூலம் வருமானம்... வரி கட்ட வேண்டுமா?

கேள்வி - பதில்

? நான் தனிப்பட்ட முறையில் யோகா பயிற்சி கொடுக்கிறேன். வருடத்துக்கு ரூ.9 முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் வருகிறது. நான் 2016-ல் சேவை வரி கட்ட வேண்டுமா? வரி விலக்கு ஏதாவது கிடைக்குமா?

@ -செல்வகுமார்,


கே.ஆர். சத்தியநாராயணன், ஆடிட்டர், ஜிவிஎன் அண்ட் கோ.


“சேவை வரிச் சட்டம் அறிவிப்பு 33/2012-ன் படி, சேவையை வழங்கும் சிறிய நிறுவனங்களை சேர்ந்தவர்களின் ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகாமல் இருந்தால், அரசு வரி விலக்கு அளிக்கிறது. உங்களின் வருமானம் ரூ.9 முதல் ரூ.10 லட்சத்துக்குள்  இருப்பதால், 2015 - 2016-ம் நிதி ஆண்டில் நீங்கள் சேவை வரி கட்ட வேண்டியதில்லை. உங்களின் வருமானம் ரூ.10 லட்சத்தை தாண்டும்போது, நீங்கள் சேவை வரி கட்ட வேண்டும்.’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்