மோடியின் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ - யாருக்கு என்ன பயன்?

ஜெ.சரவணன்

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய முழக்கம், ‘ஸ்டார்ட் அப் இந்தியா... ஸ்டாண்ட் அப் இந்தியா’, அதாவது, ‘தொடங்கிடு இந்தியா... எழுந்திடு இந்தியா’-ஆக இருக்கிறது. இளம் தலைமுறையினரைக் கவர்ந்திழுக்கும் இந்தப் புதிய திட்டத்தின் மூலம் இந்திய இளைஞர்களின் திறமைகள் கொண்டாடப்படும் என்றும், தொழில் துறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பும், தொழில் முனைவுக்கான உதவிகளும், புதிய தொழில் வாய்ப்புகளும் அதற்கான கடன் வசதிகளும் உருவாக்கித் தரப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக ரூ.10,000  கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது மத்திய அரசாங்கம்.

இந்தியாவின் தொழிற் சந்தை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இதனை பலரும் பார்க்கின்றனர்.  இந்திய தொழிற் சந்தையானது, ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்கும்போது, இந்தியர்களாகிய நமக்கும் லாபம் தருவதாக அமைய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறார்கள் அரசுத் தரப்பினர்.

மேலும், வேலைவாய்ப்பு என்பது இன்றைய இளைஞர் களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில், சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இளைஞர்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும், இந்தியாவின் தொழில் துறையை மேம்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ள இந்த ‘ஸ்டார்ட் அப் இந்தியா... ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தின் செயல்வடிவம் என்ன? உண்மையில் இது எல்லா தொழில்முனைவோர்களுக்கும் ஏற்றதுதானா? இதனைப் பயன்படுத்திக் கொள்ள இளம் தொழில் முனைவோர்கள் என்ன செய்ய வேண்டும், இந்தத் திட்டத்தின் இலக்கை அடைய அரசு என்ன செய்ய வேண்டும் என்கிற நம்முடைய கேள்விகளுக்கு தனியார் நிறுவனங்களின் நிதிநிலையை மேம்படுத்தத் தேவையான சேவைகளை வழங்கிவரும் வென்ச்சர் இன்டலிஜன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அருண் நடராஜன் தெளிவான பதிலைச் சொன்னார். அவர் சொன்ன பதில் இதோ:

“இந்தத் திட்டம் இந்தியப் பிரதமரின் முயற்சியில் இருந்து தொடங்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இது முக்கியமான திட்டம்  என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இந்தத் திட்டத்தின் நடைமுறையைப் பார்க்கும்போது, இது  எல்லோருக்குமானதா என்கிற சந்தேகம் வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்