கம்பெனி ஸ்கேன்: ஆக்ஸிஸ் பேங்க்! (NSE SYMBOL: AXIS BANK)

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய  எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் 1994-ல் ஆரம்பிக்கப்பட்ட தனியார் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் லிமிடெட்.  செப்டம்பர் 2015 இறுதியில் இந்தியா முழுவதுமாக 2,805 கிளைகளையும், 12,631 ஏடிஎம்களையும் கொண்டு ஸ்திரமான நெட்வொர்க்குடன் செயல்பட்டுவருகிறது இந்த வங்கி. 


டிசம்பர் 2015 இறுதியில் 47,876 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது இந்த வங்கி. கார்ப்பரேட் மற்றும் தனிநபருக்கான வங்கி வசதிகளை சரியான விகிதாச்சார அளவில் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருப்பதன் மூலம் ஆக்ஸிஸ் வங்கி தன்னுடைய வருமானத்தை ஈட்டி வருகிறது. நேரடிக் கிளைகள், ஏடிஎம்கள்,  மொபைல் பேங்கிங்,  இன்டர்நெட் பேங்கிங், பாயின்ட் ஆஃப் சேல் (டெபிட்/கிரெடிட் கார்டுகளை உபயோகிக்கும் போது ஸ்வைப் செய்ய பயன்படுத்தப்படும் மெஷின்களை வழங்குதல்), கால் சென்டர்கள் மூலம் சேவைகளை வழங்குதல் போன்ற பலவற்றையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்