சி.ஏ. தேர்வு... சிகரம் தொட்ட சென்னை மாணவர்கள்!

மு.சா.கெளதமன்

லகின் கடினமான தேர்வுகளில் இந்தியாவில் நடைபெறும் சி.ஏ என்று அழைக்கப்படும் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் தேர்வும் ஒன்று. இந்தத் தேர்வை 100 பேர் எழுதினால், 5 அல்லது 6 பேர்தான்  தேர்ச்சி பெறுவார்கள். கடந்த ஆண்டு நடந்த தேர்வில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ, இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். 

பிரிட்டோவுக்கு 23 வயது. லயோலா கல்லூரியில் பி.காம் படித்தவர். அவரது தந்தை ராஜாவும் ஒரு ஆடிட்டர்தான். சி.ஏ தேர்வுக்கு முன்பாகவே சி.எஸ் (Company Secretary) தேர்வை 2014 ஜூன் மாதம் எழுதி தேர்ச்சி பெற்றார் பிரிட்டோ. சி.ஏ  தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற என்ன செய்தீர்கள் என்று அவரிடம் கேட்டோம்.

“நான் சி.ஏ தான் படிக்க வேண்டும் என்று என் தந்தை என்னை ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை. இன்ஜினீயரிங், மருத்துவம் என்று தனக்கு தெரிந்த பல வாய்ப்புகளை அவர் எனக்குக் காட்டினார். இருந்தபோதிலும் சி.ஏ படிக்க வேண்டும் என்று விரும்பித்தான் நான் படிக்கத் தொடங்கினேன். ஆனால், நான் சி.ஏ இறுதித் தேர்வில் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. சி.ஏவில் நான் முதலிடம் பெற்ற செய்தியைக் கேட்டபோது, எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்கள் என்னை கலாய்ப்பதாகவே  நினைத்தேன்.  ஆனால் அது  நிஜம் என்று தெரிந்து கொண்டபோது, எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி!

சி.ஏ படிக்கும்போது ஒரு ஆடிட்டரிடம் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். அப்படி பயிற்சி பெறும் போது காலையில் வகுப்பு, அதன்பிறகு வேலை என வீட்டுக்கு வர இரவு எட்டு மணி ஆகிவிடும். இதுவே நிதி ஆண்டின் இறுதி என்றால் நடுராத்திரிதான் வீட்டுக்கு வருவேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்