ஷேர்லக்: அதிகரிக்கும் புரமோட்டர்களின் பங்கு அடமானம்!

ஷேர்லக் நம் கேபினுக்குள் நுழைந்த சமயம் நாணயம் விகடன் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்கிளேவ் குறித்த அறிவிப்பு பக்கத்தை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந் தோம். அதை நம்மிடமிருந்து வாங்கிப் படித்தவர், ‘‘பிரமாதமான கருத்த ரங்கத்தை நடத்துகிறீரே! இதில் கலந்துகொண்டால் சந்தை குறித்த அறிவை இன்னும் ஆழப்படுத்திக் கொள்ளலாம். இதில் கலந்துகொள்ள என்னை அனுமதிப்பீர்களா?’’ என்று கேட்டார். ‘‘ஓ, தாராளமாக!’’ என்றபடி, செய்திகள் பக்கம் அவர் கவனத்தைத் திருப்பினோம். ‘‘சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?’’ என்று கேட்டோம்.

‘‘தற்போதைய நிலையில் பங்குச் சந்தையில் இறக்கம் என்பது எந்தவொரு பங்கையும் விட்டு வைக்கவில்லை. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்துள்ள டாப் பத்து நிறுவனங்களும் தற்போது இறக்கத்தில்தான் உள்ளன. ரூ.19,000 கோடிக்கு மேல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்கு, நடப்பு ஆண்டில் இதுவரைக்கும் 5% இறக்கம் கண்டிருக்கிறது. மற்ற பங்குகளான ஐசிஐசிஐ பேங்க் (13%), எல் அண்ட் டி (13%), ஆக்ஸிஸ் பேங்க் (9%), எஸ்பிஐ (21%), மாருதி சுஸுகி (15%), ஆர்ஐஎல் (3%), இண்டஸ்இந்த் பேங்க் (10%), சன்பார்மா (6%) இறக்கம் கண்டிருக்கின்றன. இன்ஃபோசிஸ் பங்கு மட்டும் 3% விலை ஏற்றம் கண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்