இறக்கத்தில் பங்குச் சந்தை... இதுவும் கடந்து போகும்..!

பி.பத்மநாபன், நிதி ஆலோசகர்

ஒரு ராஜா ஒரு பெரிய போட்டியை நடத்தினார். எல்லா காலத்துக்கும் கச்சிதமாக பொருந்தும் ஒரு மந்திரச் சொல்லை சொல்பவருக்கு மிகப் பெரிய பரிசு தருவதாக அறிவித்தார். பல சான்றோர்கள் தலைகீழாக நின்று யோசித்துப் பார்த்தனர். யாருக்கும் அந்த மந்திரச் சொல் பிடிபடவில்லை.
அப்போது ஒரு முதியவர் ஒரு துண்டுக் காகிதத்தில் ஒரு வார்த்தையை எழுதி, உங்களுக்கு கஷ்டம் வரும்போதுதான் இதைப் பிரித்து பார்க்க வேண்டும் என்று சொல்லித் தந்தார். ராஜாவும் அதை  தனது கைவிரலில் மோதிர இடுக்கில் சொருகி வைத்துக் கொண்டார்.

சிறிது காலம் கழித்து அண்டை நாட்டினர் படையெடுத்து வந்தனர். ராஜாவை நாட்டை விட்டே விரட்டினர். உயிர் பயத்தில் ஓடி ஒளிந்த ராஜா, அவமானம் தாங்காமல் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

குதிக்கும்முன் அவர் விரலில் இருக்கும் துண்டுச் சீட்டு கண்ணில் பட்டது.  அதைப் பிரித்து படித்தார். இதுவும் கடந்து போகும்... என்று அதில் எழுதி இருந்தது. அதை மீண்டும் மீண்டும் படித்தார். ‘நேற்று வரை நான் ஒரு பெரிய ராஜா. ஆனால், இன்று சாவின் விளிம்பில் நிற்கிறேன். இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை. நான் இப்போது நினைக்கும் இந்த எண்ணம்கூட...’ என்று நினைத்த வேளையில், எதிரிகள் அவரைத் துரத்த, ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டார். எதிரிகளிடமிருந்து தப்பித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்