டிரேடர்களே உஷார் - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.அதிக இன்டிகேட்டர்கள்... அதிக குழப்பங்கள்...

லிவரதன், இன்டிகேட்டர் சாஃப்ட்வேர் ஒன்றை வாங்கிய புதிதில், ஒரு இன்டிகேட்டர் ஒரு பங்கின் விலை மேலே போகும் என்று காட்டினால் உடனே அந்தப் பங்கை வாங்கிவிடுவார். அப்புறம் அதே இன்டிகேட்டர், இப்ப கீழே போக ஆரம்பித்துவிட்டது என்றால், உடனே விற்றுவிடுவார். பங்கின் விலை ஏறுமா, இறங்குமா என்று பரிதவிப்போடு டிரேட் செய்துவந்தவருக்கு இந்த இன்டிகேட்டர் சாஃப்ட்வேர் மிகப் பெரிய உதவி செய்வதாக இருந்தது.

ஆனால், இதெல்லாம் இன்டிகேட்டர் சாஃப்ட்வேர் வாங்கிய புதிதில் நடந்தது. இப்போது சாஃப்ட்வேர் சொன்னபடி பங்கை வாங்கினாலும் சரி, விற்றாலும் சரி, நஷ்டம்தான் வருகிறது. சில நாட்கள் பொறுமை காத்த கலிவரதன் சாஃப்ட்வேர் விற்ற ஆபிஸுக்கு போன் அடித்தார்; யாரும் எடுக்கவில்லை.

திரும்பவும் டிரேட் செய்தார். முன்பு வாங்கிய ஐந்து இன்டிகேட்டரையும் மாத்தி மாத்திப் போட்டு பார்த்தார். ஒன்றில் சிறிய லாபம் மற்றவற்றில் பெருத்த நஷ்டமும் வந்தது.

மார்க்கெட் முடிந்து, கலிவரதன் சோர்ந்து போய் உட்கார்ந்தார். ‘‘பேசாம ஆபிஸுக்கே போயிருக்கலாமோ? ஏன் இந்த இன்டிகேட்டர் கம்பெனிகாரங்க போன் அடிச்சா எடுக்கல? ஒருவேளை மார்க்கெட் சமயத்தில எடுக்க மாட்டாங்களோ? சரி இப்ப அடிச்சி பார்க்கலாம்’’ என்று நினைத்து போன் போட்டார். போன் ரிங் சத்தம் போய்க் கொண்டிருந்தது. நல்ல வேளையாக இப்போது போனை எடுத்துவிட்டார்கள்.

‘ஹலோ... ஹலோ...’’ அடுத்த முனையில சத்தம் வரவே, கலிவரதன் டக்கென்று பிடித்துக்கொண்டார்.  ‘‘சார்... நான் கலிவரதன் பேசறேன் சார்!’’

‘‘கலிவரதனா, யாரு நீங்க, உங்களுக்கு என்ன வேணும்?’’ வழக்கம் போல கேட்டார் மதன்.

‘‘சார்... போன மாசம் உங்ககிட்ட சாஃப்ட்வேர் வாங்கினேனே! அதுக்குள்ள மறந்துட்டீங்களே!’’

‘‘ஓ... நீங்களா? இப்ப ஞாபகம் வந்திடுச்சி, சொல்லுங்க கலிவரதன்?’’

‘‘சார்.... நீங்க கொடுத்த சில இன்டிகேட்டர் வச்சி டிரேட் பண்ணினேன். நஷ்டம் வந்திடுச்சி. ஏன் நஷ்டம் வருது, அதான் என்ன பண்ணலாம்னு  கேட்க கால் பண்ணேன்’’ என்று தயங்கித் தயங்கிப் பேசினார் கலிவரதன்.

‘‘அப்படியா... நீங்க என்ன சாஃப்ட்வேர் எங்ககிட்டே வாங்குனீங்க?’’

‘‘ஐந்து இன்டிகேட்டர் சாஃப்ட்வேர்னு ஒண்ணு சொன்னீங்களே, அதான் சார்.’’

‘‘அது உங்களுக்கு வேலை செய்யலியா?’’

‘‘ஆமா... சார்.’’

‘‘இந்த சாஃப்ட்வேரை வச்சு எங்க கிளையன்ட் எல்லாரும் எக்கச்சக்கமா லாபம் பாக்கிறாங்க. உங்களுக்கு மட்டும் எப்படி நஷ்டம் வந்துச்சி. சரி, நீங்க ஒண்ணு பண்ணுங்க. இப்ப எங்க சாஃப்ட்வேர்ல, அட்வான்ஸ் இன்டிகேட்டர் எல்லாம் சேர்த்திருக்கோம். அதை வைச்சி டிரேட் பண்ணீங்கன்னா, நல்லா லாபம் சம்பாதிக்கலாம்.’’

‘‘அப்ப நீங்க போன மாசம் கொடுத்த இன்டிகேட்டர வச்சி ஒண்ணும் பண்ண முடியாதா?’’

‘‘முடியும், ஆனா, அது உங்களுக்கு சரிபட்டு வரல. அதை  உபயோகம் பண்ண உங்களுக்கு தெரியல. அதனால நீங்க இந்த அட்வான்ஸ் இன்டிகேட்டருக்கு மாறிடுங்க.’’

‘‘அதுக்குத் தனியா பணம் கட்டணுமா?’’

‘‘அதைப் பத்தி நீங்க ஏன் கவலைபடறீங்க. நீங்க நம்ம ரெகுலர் கிளையன்டு. உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டிஷ்கவுன்ட் தந்துடுறேன்’’ என்று கலிவரதனின் வாயை அடைத்தார் மதன்.

போன் பேசி வைத்த சில நிமிடங்களில் காலிங் பெல் அடிக்கவே, கதவைத் திறந்து பார்த்தால் பாலு. ஒரு மாதத்துக்கு முன்பு சாஃப்ட்வேர் தந்துவிட்டுப் போனாரே அதே பாலு. ‘‘கலிவரதன் சார், புது அட்வான்ஸ்டு சாஃப்ட்வேரைத் மதன் சார் தந்துட்டு வரச் சொன்னார்’’ என்றார் பாலு.
கலிவரதன் தன்னுடைய கம்ப்யூட்டரைத் தர, அதில் புதிய சாஃப்ட்வேரை ஏற்றித் தந்தார் பாலு. ஏற்றி முடித்த கையோடு, ‘‘சார், புது அட்வான்ஸ்டு சாஃப்ட்வேருக்கு சார்ஜ் ரூ.10,000. கேஸா குடுக்கிறீங்களா, இல்ல கிரெடிட் கார்டுல கட்டுறீங்களா” என்று கேட்டார் பாலு.
‘‘ரூ.10,000-மா? உங்க சார் ஸ்பெஷல் டிஸ்கவுன்டு தர்றார்ன்னாரே!’’ என்று அதிர்ந்து போய் கேட்டார் கலிவரதன்.

‘‘அப்படியா...? ஒரு

நிமிஷம் இருங்க’’ என்றபடி, மதனுக்கு போனைப் போட்டர் பாலு. ‘‘சார், நீங்க கொடுத்து வச்சவங்க. உங்களுக்கு 50% டிஸ்கவுன்ட் கொடுக்க சொல்லிட்டாரு. போங்க... போய் கிரெடிட் கார்டு எடுத்துக்கிட்டு வாங்க’’ என்று பாலு சொல்ல, கலிவரதனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

பாலு குசுகுசு குரலில், ‘‘இந்த டிஸ்கவுன்ட் உங்களுக்கு மட்டும்தான். இந்த அட்வான்ஸ் சாஃப்ட்வேர், பக்காவா வேலை செய்யும்.   முன்னாடி 5 இன்டிகேட்டர்தான் இருந்துச்சி. இப்ப பாருங்க இன்னும் 10 புதுசா போட்டு இருக்கேன். எல்லாமே சூப்பர் இன்டிகேட்டர்ஸ்’’ எனச் சொல்ல, கலிவரதனின் மனதில் மீண்டும் ஆசை வந்தது. கிரெடிட் கார்டைக் கொடுத்து ரூ.5,000 கட்டினார்.

அடுத்த நாள் காலை புதிய அட்வான்ஸ்டு இன்டிகேட்டர் களின் துணையுடன் டிரேட் செய்துவிட்ட பணத்தை மீண்டும் சம்பாதித்துவிட வேண்டும் என்கிற ஆசையில் டிரேடிங் செய்ய உட்கார்ந்தார். டாடா ஸ்டீல் பங்கு குறித்து இன்டிகேட்டர் என்ன சொல்கிறதென்று பார்த்தார். டாடா ஸ்டீல் பற்றி நான்கு இன்டிகேட்டர்கள் நான்கு விதமாகச் சொன்னது.

இன்டிகேட்டர் 1  -  கீழே இறங்கி விற்றுவிடலாம் என்று காட்டியது.

இன்டிகேட்டர் 2 -  இன்னும் வைத்திருக்கலாம் என்பது போல் காட்டியது.

இன்டிகேட்டர் 3 -  இன்னும் நன்றாக ஏறப்போகிறது என்று காட்டியது.

இன்டிகேட்டர் 4 -  இப்போது வாங்கலாம் என்று காட்டியது.

டாடா ஸ்டீல் பங்கை வாங்கலாமா, வேண்டாமா என்று ஒரே குழப்பமாக இருந்தது. அவரே ஒரு கணக்கு போட்டார். நேற்று வரைக்கும் ஏறிக்கொண்டு இருந்த பங்கு, இன்று இறங்கி இருக்கிறது. இது ஒரு தற்காலிக இறக்கமாகத்தான் இருக்க வேண்டும். எனவே, நாம் இப்போது நாலாவது இன்டிகேட்டர் சொல்வதை கேட்போம் என்று டாடா ஸ்டீல் பங்கை வாங்கினார். அவர் வாங்கியபிறகு, டாடா ஸ்டீல் இன்னும் இறங்க ஆரம்பித்தது.

யோசிக்கும்போதே, டாடா ஸ்டீல் விலை இன்னும் இறங்க ஆரம்பித்தது. இப்போது மூன்று இன்டிகேட்டர்கள் அந்தப் பங்கை விற்றுவிடும்படி சொன்னது. கலிவரதன் உடல் முழுவதும் வெப்பம் பரவியது. வேறு வழி இல்லாமல் நஷ்டத்தில் அந்தப் பங்கை விற்றார் கலிவரதன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்