மைக்ரோ தொடர் 1 - பாபாஜியின் பிசினஸ் ஸ்ட்ராட்டஜி!

பதஞ்சலியின் விஸ்வரூபம்...நேரடி விசிட்...மு.சா.கெளதமன்

ந்தியா...

இன்றைய உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு.  உலகின் அனைத்துவிதமான பொருட்களை வாங்கும் அளவுக்குப் பணப் புழக்கம் உள்ள நாடு. 120 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள். இவர்கள் வாங்க நினைக்கும் பொருட்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பல நூறு...

உயரும் நுகரும் சக்தி(Purchasing Power Parity):

இந்தியர்களின் நுகரும் சக்தி கடந்த 10 ஆண்டுகளில் சுமார் இரண்டு மடங்காக அதிகரித்திருக் கிறது. 2006-ம் ஆண்டில் 3,513 டாலராக இருந்த இந்தியர்களின் நுகரும் சக்தி, 2016-ம் ஆண்டில் 6,598 டாலராக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் எப்போது அமெரிக்க மோகம் வந்ததோ அன்றிலிருந்து, இந்திய மக்கள் நுகர்வுக் கலாசாரத்தை நோக்கி தலைதெறிக்க ஓடத் தொடங்கிவிட்டார்கள். இன்று சந்தையில் வெளியாகும் புதிய பொருட்களை வாங்கி பயன்படுத்தவில்லை எனில் வாழ்க்கையே வெறுத்துப் போகுமளவுக்கு நம்மவர்களில் பலரையும் நுகர்வுக் கலாசாரம் ஆட்டிப் படைக்கிறது. 

இப்படி நுகர்வு அதிகம் இருக்கும் துறைகளில் மிகவும் முக்கியமாக குறிப்பிட வேண்டியது எஃப்.எம்.சி.ஜி (FMCG - Fast Moving Consumer Goods) என்றழைக்கப்படும் ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் கூட்ஸ். ஜிடிபி அடிப்படையில் இந்தியாவின் நான்காவது பெரிய துறையான இந்தத் துறையின் கீழ் நாம் தினமும் பயன்படுத்தும் மளிகைச் சாமான்கள், சோப்பு, ஷாம்பூ, பாக்கெட் உணவுகள், பிஸ்கட்டுகள், டெட்ரா பாக்கெட் ஜூஸ்கள், டூத் பேஸ்ட், சேவிங் செட்கள் என்று தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய் தொடங்கி கால் ஷுவுகு போடும் பாலிஷ் வரை பல்லாயிரக் கணக்கான பொருட்களை பட்டியலிட முடியும். இந்தத் துறைக்கு இருக்கும் முக்கியமான சிறப்பு, இந்தத் துறைக்கு நாம் செய்யும் செலவுக் கணக்கு நமக்கு புலப்படாது. 

இந்திய எஃப்.எம்.சி.ஜி சந்தை!

இந்திய எஃப்.எம்.சி.ஜி சந்தை 2015-ம் ஆண்டில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்த சந்தை வரும் 2019-ல் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையதாக வளர்ச்சி அடையும் என்று பல முன்னணி நிறுவனங்கள் கணித்திருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்