முடியாததை முடித்துக் காட்ட வேண்டும்!

zerotohero - 9சாதிக்கும் பிசினஸ்மேன்கள்!ஏ.ஆர்.குமார்

ந்திரமோகன் பிறந்தது என்னவோ நாமக்கல் பக்கத்தில்  இருக்கிற  குக்கிராமத்தில் தான்.  விவசாயக் குடும்பம். ஆனால், இன்று இந்தியாவில் முக்கியமான தொரு லாஜிஸ்டிக் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இருபது  ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு லாரியுடன் தொடங்கப்பட்ட டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தை  இன்றைக்கு மிகப் பெரிய நிறுவனமாக வளர்த்தெடுத் திருக்கிறார்  என்டிசி லாஜிஸ்டிக் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான  கே.சந்திரமோகன். பிரமிக்க வைக்கும் இந்த சாதனையை அவர் எப்படி சாதித்தார் என்பதை அவரே சுவாரஸ்யமாக சொல்கிறார்...

ராணிப்பேட்டையில் உருவான தலைவன்!

‘‘ஐடிஐ-யில் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படித்த நான் சில மாதங்கள் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தேன். சிறுவயதில் இருந்தே லாரிகளைப் பார்த்து வளர்ந்தவன் என்பதால், சொந்தமாக ஒரு லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று ஆசை. சொந்தமாக தொழிலை செய்யும்முன், அந்தத் தொழில் பற்றிய அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும். தவிர, முதலீட்டுக்கான பணத்தையும் சேர்க்க வேண்டும். எனவே, நாமக்கல்  டிரான்ஸ்போர்ட் அசோசியேஷனில் வேலைக்குச் சேர்ந்தேன்.

ராணிப்பேட்டையில் இருந்த அலுவல கத்துக்கு என்னை இன்சார்ஜ்-ஆக நியமித்தார்கள். அங்கே போனால் உட்கார ஒரு சேர்கூட இல்லை. கேட்டால், லாரி ஆபிஸ் என்றால் இப்படித்தான் இருக்கும். அட்ஜஸ் பண்ணிக்கோ என்றார்கள். முதலில் இதை மாற்ற நினைத்தேன். ஒரு நல்ல ஆபிஸ், அதுவும் சொந்தக் கட்டடத் தில், டிரைவர்கள் வேலையை முடித்து விட்டு வந்து தங்குவதற்கு டிவி உள்பட சகல வசதி களுடன் கூடிய இடம் என ஒவ்வொன்றாக செய்து முடித்தேன். இதனால் எங்கள் மீது இருந்த இமேஜ் அடியோடு மாறியது. எல்லோரும் எங்களைத் தேடி வந்து பிசினஸைத் தர ஆரம்பித்தார்கள். நான் அங்கிருந்த   நாலரை ஆண்டுகளில் பிசினஸ் பல மடங்கு உயர்ந்தது. காரணம், நான் வெறும் சம்பளத்துக்காக வேலை செய்வதாக நினைக்கவில்லை. அது என் சொந்தத் தொழில் மாதிரி நினைத்துத்தான் செய்தேன்.

அங்கிருந்தபோது ஜுனியர் சேம்பரில் நான் உறுப்பினராகி, தலைவரும் ஆகி, எனக்குள் இருக்கும் தலைவனை பண்படுத்திக் கொண்டேன். என் பர்சனாலிட்டியை வளர்த்துக் கொள்ள ராணிப்பேட்டை வாழ்க்கை எனக்கு மிகவும் உதவியது’’.

முதலில் வாங்கிய லாரி!

1997-ல் தனியாக பிசினஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து சென்னைக்கு வந்தேன். என் கையில் இருந்தது ரூ.2.10 லட்சம். தம்புச்செட்டித் தெருவில் ஐந்தாவது மாடியில் இரண்டு அறைகள் கொண்ட வீடுதான் என் ஆபிஸ், தங்கும் அறை எல்லாமே. நாமக்கல் ட்ரான்ஸ்போர்ட் கேரியர்ஸ் என்று கம்பெனியை தொடங்கி விட்டு, ஆர்டருக்கு சென்னை முழுக்க அலையாய் அலைந்தேன். ஒரு நாளைக்கு 200 கி.மீட்டர் தூரம் சுற்றுவேன். என்றாலும் எனக்கென சொந்தமாக ஒரு லாரிகூட இல்லை. எனவே, ஒரு லாரியை யாவது வாங்கிவிட வேண்டும் என்று என் மனம் துடித்தது. ஒரு பழைய லாரியை வாங்க முடிவு செய்தேன். ஆனால், அதற்குத் தேவையான பணம் கையில் இல்லை. அப்போதெல்லாம் எனக்குள் சொல்லிக் கொள்ளும் சிறு கவிதை இது:

‘‘வெற்றி என்னும் சிகரத்தை யாரும் வானில் பறந்து அடைந்து விடுவதில்லை

நெற்றியின் வியர்வை நிலத்தில் சிந்தாமல் வெற்றி என்பது கிடைத்து விடுவதில்லை

ஊரும் உலகும் உறங்கு கையில் கண் விழித்து  உழைப்பவர் தோற்பதில்லை!’’

ஒரு ஃபைனான்ஸிங் கம்பெனியில் கடன் வாங்கி லாரியை வாங்கினேன். அப்போது எனக்கு உதவி செய்த மார்வாடிகளை என்னால் மறக்கவே முடியாது.

முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு வருமானமும் செலவும் சரியாக இருந்தது. பெரிய ஒரு ஆர்டருக் காக நான் காத்துக் கொண்டிருந் தேன். கிட்டத்தட்ட 1.25 கோடி ரூபாய் அளவுக்கு எனக்கு  ஒரு ஆர்டரும் கிடைத்தது. இவ்வளவு பெரிய வேலையை மற்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு துணிந்து எடுத்து, அதை சரியாக செய்து கொடுத்தேன். இதனால் எங்கள் பெயர் எல்லோருக்கும் தெரிய வந்ததுடன், என் வருமானமும் அதிகரித்தது. அந்த தீபாவளிக்கு எல்லோருக்கும் போனஸ் கொடுத்தது போக என் பையில் 50 ரூபாய் மீதமிருந்தது.

புரஃபஷனல் அணுகுமுறை வேண்டும்!

1997 முதல் 2000 வரை நாங்கள் பெரிதாகக் கஷ்டப்பட்டாலும் பெரிய அளவில் வளர முடிய வில்லை. எனவே, பிரைவேட் நிறுவனத்திலிருந்து இன்கார்ப்பரேஷன் நிறுவனமாக மாற்ற முடிவெடுத்தேன். தவிர, நிறுவனத்தில் பல புதிய புரஃபஷனல்களை கொண்டு வந்தேன். நிதி மேலாண்மை செய்ய ஒரு இயக்குநர், புராஜெக்ட்டுக்கு ஒரு இயக்குநரை நியமித்தேன். ராஜாசுந்தரம்,  தில்லைஅரசன், முத்துசாமி ஆகியோர் கொண்ட இயக்குநர் குழுவை உருவாக்கினேன். மேலும், பன்முகத்திறமையும் அனுபவமும் மிக்க அஜீத் மேனனை செயல் இயக்குனராக நியமித்தேன்.  இதனால்  வேலை களை இன்னும் கவனமாக செய்ய இது எங்களுக்கு உதவியது. கூடவே ஐ.எஸ்.ஓ. சான்றிதழையும் வாங்கினோம். இந்தத் துறையில் முதன் முதலாக ஐ.எஸ்.ஒ. பெற்றது நாங்கள்தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்