தங்கம் விலை ஏறுமா?

பிரெக்ஸிட் தாக்கம்!ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

ந்த முதலீடாக இருந்தாலும், எந்த நேரத்தில் முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். அதே போல் எல்லா முதலீடுகளிலும் சாதக, பாதக அம்சங்கள் இருக்கவே செய்கின்றன. என்றாலும் தங்கத்தில் முதலீடு செய்வது நம்மவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தரக்கூடியதாக இருக்கிறது. உலக அளவிலும்  பொருளாதார வளர்ச்சியில் எப்போதெல் லாம் தடைகள் வருகின்றனவோ, அந்த சமயத்தில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. அந்த வகை யில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு அதிக வாக்குகள் கிடைத்திருப் பதன் காரணமாக, தங்கம் விலை உயருமா என்கிற கேள்வியை பலரும் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். 

பிரெக்ஸிட் தாக்கம்!

பிரெக்ஸிட்டினால் இரண்டு விளைவுகள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறவில்லை எனில்       யுரோவின் மதிப்பு அதிகரிக்கும். இதனால் அமெரிக்க டாலர் சரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தங்கத்துக்கு பாசிட்டிவ்வான செய்தி. பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற முடிவு செய்துவிட்டால், பங்குச்சந்தைகளில் பல்வேறு அதிர்வுகளை உண்டாக்கும். இதன் தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பிரிட்டன் வெளியேறினாலும் வெளியேறாவிட்டாலும் தங்கத்துக்கு அது சாதகமாக கருதப்பட்டது.

பிரெக்ஸிட் முடிவுகளின் காரணமாக, சென்ற வெள்ளி அன்று காலையில் பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பங்குச்சந்தை, கரன்சி, கச்சா எண்ணெய் அனைத்திலுமே ஒரு வித நிச்சயமற்ற தன்மை காணப்பட்டதால், தங்கம் சர்வதேச சந்தையில் 6% மேல் ஏற்றத்துடன் 1330 டாலரில் வர்த்தகமானது. ஆனால் இவையெல்லாம் தற்காலிக ஏற்றத்துக்குக் காரணமாக இருந்தாலும், அமெரிக்க டாலரின் மதிப்பில் நாம் சந்திக்கக்கூடிய எதிர்கால அச்சங்கள் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்ய இருக்கின்றன.

தங்கத்துக்கும், டாலருக்குமான நேரடித் தொடர்பு!

2008-ல் அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியது. இதனால் வட்டி விகிதத்தை மிகவும் குறைத்தது. பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் விதத்தில் அதிக அளவில் டாலரை புழக்கத்தில் கொண்டு வருவதற்காக அச்சடிக்கத் தொடங்கியது. இதனால் டாலரின் மதிப்பு தொடர்ந்து சரிந்து, 2011-ல் தங்கம் விலை உச்சத்தை அடைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்