லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்!

கணேஷ் ஐயர், மூத்த துணைத் தலைவர் (க்ளெய்ம்ஸ் அண்ட் அண்டர் ரைட்டிங்), கோட்டக் மஹிந்திரா ஓல்ட் மியூச்சுவல் லைஃப் இன்ஷூரன்ஸ்.

லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் என்றாலே இப்போதெல்லாம் மக்கள் எரிச்சலடைகிறார்கள். இன்ஷுரன்ஸ்  பாலிசி அவர்களுக்கு அவசியமான ஒன்று; தவிர, அவர்களால் ஒரு பாலிசியை எடுக்க முடியும் என்றாலும்கூட அவர்கள் அப்படி எரிச்சல் அடைவதற்கு காரணங்கள் பலப்பல. அதில் முக்கியமான காரணம், க்ளெய்ம்.

லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்த பலருக்கு தாங்கள் எதிர்பார்த்த க்ளெய்ம் கிடைக்கவில்லை என்பதுதான் புலம்பலாகவே இருக்கிறது. ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் செட்டில் மென்ட் விகிதம் 90% என்று விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. அப்படியெனில் க்ளெய்ம் சரியாக கிடைக்கவில்லை என்று பாலிசிதாரர்கள் ஏன் புகார் செய்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே. 

பாலிசிதாரர் கோரியுள்ள க்ளெய்மை சரியாக தர வேண்டும் என்பது ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலையாய கடமை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்ம் தொகையைக் குறைப்பதற்கும், முழுவதுமாக மறுப்பதற்கும் சொல்லும் காரணங்கள் என்னென்ன, எந்த இடத்தில் எல்லாம் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பவை ஒரு பாலிசிதாரர் தனக்கான க்ளெய்மை சரியாகப் பெற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்