ரகுராம் ராஜன் எக்ஸிட்... இந்தியப் பொருளாதாரத்து க்கு சாதகமா, பாதகமா?

சோ.கார்த்திகேயன்

ரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை வகிக்க விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் அறிவித்துள்ளது, இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்; இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படும். விலைவாசியும் வாராக் கடனும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ரகுராம் ராஜனின் முடிவு என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

“பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது மத்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே முடியாது. மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; தொழில் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதனால், பணவீக்கம் கட்டுக்குள் வரும். மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து இதற்கான சூழலை உருவாக்கி வருகிறது.

சரியான நடவடிக்கையே!

மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் வட்டி விகிதத்தை சரியாக குறைக்க வில்லை என தொழில் துறையினர் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், பணவீக்கம் குறையாமல் வட்டி விகிதத்தைக் குறைக்க மாட்டேன் என்பதில் ரகுராம் ராஜன் உறுதியாக இருந்தார். பணவீக்கம் குறைந்ததை அடுத்து வட்டி விகிதத்தைக் குறைக்க ஆரம்பித்தார். இதுதான் சரியான நடவடிக்கையும்கூட. இதை செய்யாமல் வட்டி விகிதத்தைக் குறைத்திருந்தால் உண்மையான வருமானம் (real rate of return) மிகவும் குறைந்திருக்கும். உதாரணத்துக்கு,  பணவீக்கம் 7%, டெபாசிட் வட்டி 7% என்றால் யாரும் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய மாட்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்