நாணயம் லைப்ரரி: உங்களுக்குள் இருக்கிறான் தலைவன்!

புத்தகத்தின் பெயர்: டிஸ்கவர் யுவர் ட்ரூ நார்த் (Discover Your True North)

ஆசிரியர்: பில் ஜார்ஜ்

பதிப்பகம்:
டைம்ஸ் குரூப் புக்ஸ்

ம் எல்லோருக்குள்ளும் தலைமை ஏற்கும் குணம் இருக்கவே செய்கிறது. அதனை எப்படி வளர்த்தெடுப்பது...? பில் ஜார்ஜ் எழுதிய ‘டிஸ்கவர் யுவர் ட்ரூ நார்த்’ புத்தகம் அதனை நமக்குச் சொல்லித் தருகிறது.

தலைமைப் பண்பு என்பது பிறவிக்குணம் அல்ல. தலைவர்கள் உருவாகிறார்கள்; பிறப்பதில்லை என்பதே நிஜம் என்று அதிரடியாய் ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

தலைமைப் பண்பு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது. கடல் பயணத்தில் திசைகளைத் தெரிந்துகொள்ள முதலில் வடக்கு எது என்று தெரியவேண்டும். அப்போதுதான் நாம் செல்லும் திசையை தெரிந்துகொண்டு செல்ல முடியும். அதே போல்தான் தலைமைப் பண்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல், தலைவராக முடியாது என்்கிறார் ஆசிரியர்.

‘அடப்போங்க சார். நான் எனது நிறுவனத்தில் சாதாரண பதவியில்தான் இருக்கிறேன்’ என்கிறீர்களா? அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. தலைமைப் பண்புக்கான குணங்களை தெரிந்து கொண்டால், சரியான சூழலில் அது உங்களுக்கு கைகொடுத்து உங்களை தலைவனாக மாற்றி விடும் என்கிறார் ஆசிரியர்.

 தலைமைப் பண்பு குறித்து புரிந்துகொள்வது ஒன்றும் சுலபமான காரியமில்லை.  அதற்கு பலவருடங்கள்கூட ஆகலாம். இதில் உங்கள் தனித்துவத்தையும் நீங்கள் பாதுகாத்துக்கொண்டு அனைவரும் நம்பும்படியான நடவடிக்கைகளுடனும் திகழ வேண்டியிருக்கும். உங்களுடைய அகத்தினை ஆராய்ந்து பார்க்கும் குணம் மற்றும் நண்பர்கள்/சகபணியாளர்கள் போன்றவர் களிடம் இருந்து கிடைக்கும் பின்னூட்டக் கருத்துக்கள் போன்றவையும் அவசியமாகும்.

பெரும்பான்மையான தலைவர்களை நேர்காணல் செய்யும்போது அவர்கள் சொல்லும் ஒரே ஒரு பொதுவான விஷயம் எது தெரியுமா? அவர்கள் வாழ்க்கையே அவர்களை தலைவர்களாக மாறுவதற்கு பெரும் காரணமாக இருந்தது என்பதைத்தான். நீங்கள் வாழும் வாழ்க்கையே உங்களுடைய அடித்தளம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்