கேட்ஜெட்ஸ்

கார்த்தி

லெனோவோ வைப் K5 (Lenovo vibe k5)

பட்ஜெட் மொபைல்களின் போட்டியில் லெனோவோ, அசூஸ், ஹுவாய் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபடுவதினால், வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் ஒரே லாபம், மிகவும் குறைவான விலையில் மொபைல்கள் கிடைப்பதுதான்.

சில மாதங்களுக்குமுன் K5 பிளஸ் என்ற மாடலை 8500 ரூபாய்க்கு அறிமுகம் செய்து, சந்தையில் இருக்கும் குறைவான விலை மொபைல்களுடன் போட்டி போட்டது லெனோவோ. தற்போது, அதைவிடவும் குறைவாக 6999 ரூபாய்க்கு வைப் K5 மொபைலை அறிமுகம் செய்திருக்கிறது.
2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னெல் மெமரி,1.4GHZ, 64-பிட் கோல்கம் ஸ்னேப்டிரேகன் ஆக்டோகோர் பிராசஸர்,5 இன்ச் டிஸ்ப்ளே,294 பிக்ஸல் கிளாரிட்டி என அசத்தலாக வந்திருக்கிறது லெனோவோ K5.

13 மெகா பிக்ஸல் ரியர் கேமரா, 5 மெகா பிக்ஸல் ஃபிரன்ட் கேமரா, டால்பி அட்மோஸ் ஒலிநுட்பத்துடன் இருக்கும் இரண்டு ஸ்பீக்கர்கள், டூயல் சிம் என அறிவித்து இருக்கும் விலையைவிட சிறப்பானதொரு ஸ்பெக்ஸை தந்து அசரடிக்கிறது லெனோவோ.

மூன்று நிறங்களில் (கோல்டு, சில்வர், கிரே), 142 கிராம் எடையில் இருக்கும் இந்த மொபைல், 2750 mAh பேட்டரி தாங்கும் திறனில் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மென்பொருளை கொண்டு இயங்குகிறது வைப் K5.

அடுத்து வெளியாக இருக்கும் எல்லா மொபைல்களிலும், பெரிய  எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பத்தை, இதில் கொடுத்திருக்கி றார்கள். VR ஹெட்செட்டை ஒன்றை சந்தையில் வாங்கி, இந்த மொபைலின் மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டியில் வீடியோக்களைக் கண்டு மகிழலாம்.

அமேசான் தளத்தில் பிரத்யேகமாக, இந்த மொபைல் விற்பனை செய்யப்படுகிறது.

விலை : ரூ.6,999

பிளஸ்


* விலை
* 2 ஜிபி ரேம்
* விர்ச்சுவல் ரியாலிட்டி
* டால்பி அட்மோஸ் ஒலித்திறன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்